*என் அன்பே வருவாயா. .?* காற்றே நீயாவது அவனை...
*என் அன்பே வருவாயா. .?*
காற்றே நீயாவது அவனை தொட்டு அவன் பரிசத்தை எனக்காக பரிசளிக்க மாட்டாயா ..?
என் இதய துடிப்பின் சத்தத்தை அவனை கேட்க செய்வாயா. .?
அது அவனுக்கான துடிப்பு என்பதை அறிய சொல்வாயா ..?
நான் படும் வேதனையை படம் பிடித்துக் காட்டினாலும் காட்சி அது பொய் என்பானோ..?
காட்சிகளை படமாக்கி கண்ட பின்னரும் மனம் தான் மாறுமா. .? இல்லை மாற தான் விரும்புமா..? நான் தான் காரணம் என்று கூறி விட்டு விட்டு விலகி விடுவானோ ..? பாவை நான் பரித்தவிக்கிறேன்.
என் கண்கள் உன்னிடம் கூறிய வார்த்தைகளை நீ கேட்க தயாராக இல்லை கேட்டால் புரிந்து கொள்வாய் புரியாவிடின் விரைவில் பிரிந்து செல்வாய் ...
தவிப்பின் ஆழம் தவிக்கும் போது தான் தெரியும். ...
பிரிவின் வலியும் உனக்கான ஒருவர் உன்னை பிரியும் போது தெரியும். ...பிரிவின் ஆழம் அறிந்து ஆழ்கடலில் தேடினாலும் கிடைக்காத தூரம் விடைபெற்றுச் சென்று இருப்பேன்.
உனக்கு என் வலி நகைச்சுவையாக தோற்றம் அழிக்கிறது உன்னால் முடிந்தவரை நகைத்துக்கொள் ....
காலம் கடந்து நகைக்க முடியாது காரணம் நகைக்க நான் இருக்க மாட்டேன்.
வானவில்லும் வர்ணம் இழந்து கண்ணீர் வடிக்கிறது என் உணர்வுக்களில் பட்டாம்பூச்சியும் சிறக்கொடிந்து விழி நீர் சுரக்கிறது ...
வலியுடன் வாழ பழகி கொண்டேன் என்றோ ஒரு நாள் வருவாய் என்ற நம்பிக்கையில். ..
தனிமையில் ஒருத்தி
தீபிகா தர்ஷனி