பஞ்சு மிட்டாய் எத்தனை பெரிய பஞ்சு மிட்டாய் வானில்...
பஞ்சு மிட்டாய்
எத்தனை பெரிய பஞ்சு மிட்டாய்
வானில் பறந்து போகுதடா! - அதை
எட்டிப் பிடிக்க ஏணி ஒன்று வேண்டும்,
ஓடிப்போய் கொண்டாடா!
அத்தனையும் ஒரு கோணிப்பை கொண்டு
வாரி எடுத்து வந்து,
அன்புச் செல்லங்கள், நம் வீதிப்பிள்ளைகளுக்கு
அள்ளி யள்ளித் தருவோம்!
மேகமெனும் ரதம் மெல்லப்போகின்ற(து)தெ (எ)ன்(று)
றெ(எ)னக்கும் தான் தெரியும்;
தாகம் தணித்(து)த(அ)து தரணி செழித்திட
மாமழையை பொழியும்.
ஆக நான் அப்படிச் சொன்னது, குழந்தைகள்
'கொள்'ளென சிரித்திடத்தான்!
ஏகமாய் வேடிக்கை செய்வதென்றாலும்
எடுத்துரைப்போம் பொதுவுடைமை!
-தமிழ் தீக்குச்சி