🩷❤️🧡💛💚🩵💙💜🖤🩶🤍 *ஒரு பெண்ணின்* *காதல் மனம்* படைப்பு *கவிதை...
🩷❤️🧡💛💚🩵💙💜🖤🩶🤍
*ஒரு பெண்ணின்*
*காதல் மனம்*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🩷❤️🧡💛💚🩵💙💜🖤🩶🤍
அன்பானவனே !
தூண்டில் போட்டாலும்
சிக்காத மீனாக இருந்தேன்...
அது எப்படி
நானே துள்ளி வந்து
உன் தூண்டியில்
சிக்கினேன்....?
வலை விரித்தாலும்
விழாத மானாக இருந்தேன்...
அது எப்படி
விரிக்காத
உன் வலையில்
நானே வந்து
விழுந்தேன்....?
கண்ணிவைத்தாலும்
சிக்காத
சிட்டு என்று நினைத்தேன்
அது எப்படி
நீ கண்ணி வைக்காமலேயே
நான் சிக்கினேன்...
வண்டுகள்
தட்டிய போதும்
திறக்காத மொட்டாக
இருந்தேன்....
அது எப்படி
நீ தட்டாமலே
நான் திறந்தேன்...?
சூரியன் ஒளிபட்டும்
மலராத
தாமரையாக
இருந்தேன்
உன் ஒளி படாமலேயே
நான் மலர்ந்தது எதனால்?
ஓ ...!
இது தான் காதலா....?
*கவிதை ரசிகன்*
🩷❤️🧡💛💚🩵💙💜🖤🩶🤍