முதுகு வலியைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் 1. எப்போதும் சுறுசுறுப்போடு...
முதுகு வலியைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள்
1. எப்போதும் சுறுசுறுப்போடு இருக்க வேண்டும். மேலும் பொதுவான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். (உதாரணமாக) நடப்பது, நீச்சல் அடிப்பது, சைக்கிள் ஓட்டுவது.
2. தாழ்வான நாற்காலியில் அதிக நேரம் அமர வேண்டாம்.
3. உறங்கும் போது கடினமான மெத்தையை உபயோகிக்கவும் அல்லது தரையில் உறங்கவும்.
4. நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது இருக்கையை உங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளவும்.
5. கணணியில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள் தங்கள் இருக்கையை சரிசெய்து, தனது முழு முதுகும் இருக்கையில்(நிமிர்ந்தவாறு) இருக்கும்படி அமரவும்.
6. அதிக நேரம் முதுகு திரும்பியவாறு வேலை செய்ய வேண்டாம், அதிக நேரம் நின்று கொண்டே பயணிக்க வேண்டாம்.
7. முதுகுவலி எடுத்தால் நீண்ட நேரம் அமருவதை தவிர்க்கவும், 30 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து பொதுவான பயிற்சிகள் செய்யவும்.