நினைவினில் வாழ்ந்திட நினைக்கின்றேன் உன் நினைவுகளாலே இறக்கின்றேன் நினைத்ததும்...
நினைவினில் வாழ்ந்திட நினைக்கின்றேன்
உன் நினைவுகளாலே இறக்கின்றேன்
நினைத்ததும் என்னிடம் இருப்பது போல் -வரும்
நினைவினை அழித்திட நினைக்கின்றேன்
நானுன்னை நினைத்திங்கு இருப்பது போல்
நீஎன்னை நினைப்பதாய் நினைக்கின்றேன்
காதலின் வலிகளை மறப்பதற்கு
பல வழிகளை தேடிட நினைக்கின்றேன்
நினைத்திடும் யாவையும் நடந்திடவே
கடவுளயும் நெஞ்சில் நினைக்கின்றேன்
கலை முகம் அவளது நினைவினிலே
அனைத்தயும் மறந்து நான் அழுகின்றேன்