எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மீண்டும் அஞ்சலி!! குடும்ப பிரச்னைகள் காரணமாக சில மாதங்களாக...

மீண்டும் அஞ்சலி!!

குடும்ப பிரச்னைகள் காரணமாக சில மாதங்களாக சினிமாவைவிட்டு விலகி இருந்த அஞ்சலி இப்போது மீண்டும் பழைய தீவிரத்துடன் நடிக்க திரும்பி விட்டார். தனது பழைய கசப்பான அனுபவங்களை மறந்து நடிப்பில் தீவிர கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்.

தற்போது கோனா வெங்கட்டின் தெலுங்கு படம் ஒன்றில் கடந்த 20 நாட்களாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் பாங்காக் மற்றும் தாய்லாந்தில் நடந்து வருகிறது. இதுதவிர இரண்டு தெலுங்கு படத்திலும் ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.

தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் அஞ்சலி அதற்கென தனியாக ஒரு மானேஜரை நியமித்திருக்கிறார். சுராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் காமெடி படத்தில் அஞ்சலி நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதுதவிர இன்னும் இரு புதுப்படங்களில் நடிக்க பேச்சு நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் சித்தி பாரதிதேவி, இயக்குனர் களஞ்சியம் பிரச்னைகள் இருக்காது என்று இங்குள்ள முக்கியமான சினிமா புள்ளி ஒருவர் கொடுத்திருக்கும் உத்தரவாதத்தின் பேரில் அஞ்சலி தீவிரமா தமிழ் சினிமாவுக்கு திரும்புகிறார்.

நாள் : 6-Jun-14, 10:49 am

மேலே