எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்றுதான் 'சே குவேரா' பிறந்தான், அவன் ஞானக் குழந்தை...

இன்றுதான் 'சே குவேரா' பிறந்தான்,
அவன் ஞானக் குழந்தை இல்லை,
கடவுளை மறுத்தான்,
மனிதனை நினைத்தான்,
மார்க்சியத்தில் வளர்ந்தான்,
கம்யூனிஸத்தில் களத்தில் நின்றான்,
"புரட்சி வேற்றுமை பாராமல்,
மனித இனத்திற்கு உழைக்கும்
உணர்ச்சி வராத வரையில்
நாம் இரை தேடி, இனம் பெருக்கி,
உண்டுஇ உறங்கி வாழும்
மிருகங்களாகவே இருப்போம்" என்றான்.
மக்களுக்காகவே ஏகாதிபத்தியத்தை எதிர்த்தான்,
அமெரிக்க அரசு அவனை 'பயங்கரவாதி' என்றது.
அவனை சுட்டுக் கொல்லும்படி கொக்கரித்தது,
ஆனால் அவன் சாகவில்லை; சாகடிக்கப்பட்டான்
அவன்தான் கூறினான்,
"அமெரிக்க பயங்கரவாத அரசே,
நீ சுட்டுக் கொல்வது என்னையல்ல,
என் உடலைத்தான்"
சரியாகத்தான் சொல்லி இருக்கிறான் சே,
நம் சிந்தனைகளில் சே
வாழ்ந்து கொண்டுதானிருக்கிறான்!

பதிவு : சௌமியா
நாள் : 14-Jun-14, 8:05 pm

மேலே