குழந்தைப் பருவம்

எந்தக் கவலையும்
இல்லாத குழந்தைப் பருவம்
எந்த ஒரு செயலிலும்
அனுபவம் கண்ட குழந்தைப் பருவம்
எந்த சூழலையும் எதிர் நோக்காமல்
நிகழ்காலத்தை மட்டும் நினைக்கும்
நினைத்த போது தூங்கும்
விரும்பியதைச் செய்யும் குழந்தைப் பருவம்
எந்தச் செயலையும் துணிச்சலாக செய்யும்
துருதுரு வென சுற்றித் திரியும் பருவம்
கள்ளங்கபடம் இல்லாமல் கட்டில் மேல் இருந்து
துள்ளிக்குதிக்கும் ஆனந்தப் பருவம்
எந்தவொரு பொருளுக்கும்
பிடிவாதம் பிடிக்கும் வெகுளிப் பருவம்
சேட்டைகள் செய்து மண்டை உடைந்த
விளையாட்டுப் பருவம்
கொஞ்சும் மழலைப் பேச்சு மிகுந்தும்
மிகுந்த மகிழ்ச்சியால் ஆனந்த மழையில்
கப்பல் விட்டு விளையாடியப் பருவம்
பள்ளிக்குப் பயந்தப் பருவம்
மீண்டும் கிடைக்குமா இந்த அரிதானப் பருவம்.