நிழற்குடை

வெயிலில் காய்ந்து

மழையில் நனைந்து

உருக்குலைந்த போதும்

உன்னை நாடி வந்தவரை

காத்திட நீ ஓர்நாளும்

தவறியதில்லை !!

உந்தன் நிழலில்

பிறந்த நட்புகள் தான்

எத்தனை ! எத்தனை !!

மலர்ந்த காதல்கள் தான்

எத்தனை ! எத்தனை !!

காலங்காலமாய் நீ

பூண்டிருந்த திருவிழாக்கோலம்

என்னாயிற்று ??

உன்னைக் கடந்து சென்ற

ஒவ்வோர் பேருந்தும்

உன் வாசலில்

தம் சக்கரம் பதிக்காமல்

சென்றதேயில்லை !!!

இப்போது என்னாயிற்று?

பேருந்துகளும் தம்

பாதை மாற்றிக்

கொண்டனவோ ??

மனித உறவுகள் அனைத்தும்

உதாசீனப்படுத்திச்

சென்று விட்டனவோ ?

கவலை கொள்ளாதே ….

காலம் மாறும்

வசந்தம் உந்தன்

வாசல் வந்து சேரும் !!

பழைய பரபரப்பும்

அழகான உருவும்

உனை வந்து சேரும் !

மீண்டும் நீ பூணுவாய்

விழாக் கோலம் !!!

எழுதியவர் : பி.தமிழ் முகில் (30-Mar-13, 1:56 am)
சேர்த்தது : Tamizhmuhil
பார்வை : 91

மேலே