காதலன் பார்வையில் காதல்...!!!

அமைதியாக உன்னை வர்ணித்தால்
அணுக்களில் அதிர்வு..!!
சொல்ல வந்த வார்த்தை தவிக்கும்
என் காதல் சொல்ல துடிக்கும்,
தனியே துடித்த இதயம்
உன் பெயரை எழுத அழைக்கும்,
விண்ணில் பறந்து பறந்து நானும்
உன்னில் என்னை பார்ப்பேன்..!!
கலவரமாய் எனக்குள்ளே காதல் புகுந்து
நிலநடுக்கம் உண்டு பண்ணுதே...???
தனியாய் அலைந்திருந்தால்
தவிப்புகள் இல்லையே,
துணையாய் நீ வந்து
துடிப்பதை முடுக்கி விட்டாய்...!!
பிரிவதை நீ கொஞ்சம் விரும்பினால்
இதயம் வெடிக்கும் தன்னாலே,
வார்த்தை பேச தயங்கினால்
என் பேச்சும் இழக்கும் உன்னாலே..!!
இதயம் தலைகீழ் துடித்தாலே
காதல் நோயின் அறிகுறி தெரியுமே...!!
கிழியும் காகிதமாய் என் மனம் பறக்குது
உன் காதல் கதை கொஞ்சம் அதை கிழிக்குது..!!
ஒருநாள் காதல் என்னிடம்
கனவுகள் வேண்டுமா கேட்டது,
மறுநாள் காதல் என்னிடம்
கனவுகள் அழிக்க பார்த்தது..!!
அதனால் இது எதனால் என்று தெரியாமல்
காதல் கரை புரண்டு ஓடுகிறது...!!