அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்.....!!!

எவன் என்ன சொன்னால் என்ன,
உன்னை எட்டி உதைத்தால் என்ன,
உனக்குள் திறமைகள் இருக்கு
அது வெளிவர உன்னை திருத்து..!!

வானம் கூட இறகு இன்றி
பூமி சுற்றி வருகிறதே,
உன் கற்பனை என்னும் சிறகை நீட்டி
உலகம் சுற்றி பறந்து விடு..!!

ஒரு கிளையில் உன் திறமை இருக்க,
மறு கிளையில் உன் அறிவிருக்க,
ஒரு மரமாய் நீ இருந்தால்
யாரும் உன்னை வெட்ட முடியாது..!!

நீ நின்று கேட்டால் அறிவுரைகள் சொல்ல
ஆயிரம் பேர் வருவான்..!!
உனக்கு அறிவு இருக்கும் போது
எதற்கு அவர்களின் அரைகுறை அறிவுரைகள்..!!

திருந்தாத மனிதன் மட்டுமே
அடுத்தவனை திருத்த துடிக்கிறான்..!!
உடைத்த கலர் சோடா குடிக்கவே
மேடையில் ஒருமணி நேரம் கத்துகிறான்..!!

அடுத்தவன் பேச்சை நம்பி
உன் சுய அறிவை இழந்து
நடு ரோட்டில் அலையாமல்,
உன் பேச்சை நம்பி
சுயமாக சிந்தித்தால்,
உன்னை நாடு போற்றுமோ இல்லையோ
நீ பெருமைப்படலாம்..!!!

எழுதியவர் : மனோ ரெட் (8-Jul-13, 2:50 pm)
பார்வை : 158

மேலே