சருகாக உதிர்ந்த இலைகள்

இலைகள் சலசலவென்று காற்றில்
அசைந்து ஆடின
ஆடும் போதே ஒன்றிரண்டாக
உதிர்ந்தன
பழுப்பும் பச்சையும் கலந்து
மண்ணில் பரவின
பழுத்த இலைகள் மிகுதியாகவும்
பச்சில இலைகள் குறைவாகவும்
வீழ்ந்தன சருகாக
நியதிகளை சீர் தூக்கின்
வேறுபாடு விரியும்
இயற்கையே மாறுபட்டு நிற்குங்கால்
மனித இனம் அறிய
முதியவர்கள் இறப்பதோடு
பால் மணம் மாறா குழந்தைகளும்
கண் இமைக்க மறக்க முடியம் போல்
கேட்பதற்கு சங்கடம்
பார்ப்பதோ துன்பம்
நடக்கிறது கொடூரங்கள்
நிறுத்த முடியாத தருவாயில்.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (10-Oct-13, 3:03 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 98

மேலே