தேவதைகள் தூங்குகிறார்கள் பாகம் 7 - உதயா

தேவதைகள் தூங்குகிறார்கள் பாகம் 7 - உதயா
------------------------------------------------------------------------

நான் இங்குதான் எங்கோ மிக அருகில் இருப்பதை உணர்ந்த அவள் மனதின் துடிப்புகள், ஆழ்மனதில் தொற்றிக்கிடந்த அச்சத்தை சாம்பலாக்கி, தைரியத்திற்கு நிச்சயம் உரமூட்டியிருக்கும். மழைக்கும் பின் முளைக்க தொடங்கும் காளானைப் போல , என் சுவாசக் காற்றை உணர்ந்த மறுகணத்தில் அவளுள் வீரம் விரைந்து விருட்சமாகியிருக்கும். உயிர் அணுக்களால் பூட்டி தொடுத்த " விஜி ....... விஜி ........... " என்ற ஒற்றை சொல்லில் புவியின் சுழற்சி சற்றே தடைபெற்று தொடர்ந்திருக்கும்... , என் கால்களின் பாய்ச்சலில் ஒளியின் வேகம் இரட்டிப்பாக மலர்ந்து அவளைக் கண்டெடுத்த கணப்பொழுதில். அவள் கரங்களை கட்டிப் போட்டிருந்த கயிறுக்கும் , நாற்காலிக்கும் என் கரங்களின் ருத்ரதாண்டவத்தில் மோட்சம் பெற்றிருக்க கூடும்

காதலனைக் கண்ட ஆனந்தத்தில் விஷாந்தினி , புன்னகை தேசத்தில் புகுந்து பூக்களுக்கு கண்ணீரின் சுவையினை மணமாக சாயம் பூசிக்கொண்டே முத்தமெனும் இரதத்திற்குள் மின்னலை மிஞ்சும் வேகத்தில் இராணியாகியிருந்தாள். என் வசந்தம் வாடியிருப்பதை கண்டு , என் விழிகளில் வெடித்துக்கொண்டிருந்த இலட்சக்கணக்கான குரோத இமயங்கள் , அவளை அடைத்து வைத்திருந்த நயவஞ்சகனின் சிறகுகளின் நாடித்துடிப்பினை செயலியக்க கட்டளையிட்டருக்க கூடும்

களவுபோன என் உயிரினை கண்டெடுத்து என் இதயத்திற்கு உணர்வூட்டியதில் , என் அச்சத்தில் மூழ்கிப் போன காதலெனும் வானவில், அவளின் கண்ணெதிரே நிகழ்ந்துக்கொண்டிருந்த உயிர் அணுக்களின் அசைவினில் வர்ணம் தீட்டிக் கொண்டே போளிவுரத் தொடங்கியது. அந்த கனந்த இடைவிடா முத்த மழையில் , அலைப் பேசியின் துடிப்பு தென்றலாக புகுந்து , முத்தத்தை சாரலாக்கி சற்று நேரம் கானலாக செய்தது .

உலகின் அசைவையெல்லாம் தன் உடலினில் திணித்துக்கொண்டு தூண்டிய என் தாயின் பதற்றத்தில் , என் தம்பியின் அலைபேசி கரைந்து , விரைந்து வந்ததை , துளி மாற்றமின்றி மிக துல்லியமாக உணர்ந்துக் கொள்ள முடிந்தது ... என் மனதின் உணர்வலைகளால் .

அழைப்பு ஏற்பு பொத்தானை சொடுக்கியதும் " அண்ணா.. அண்ணா .. எங்க இருக்க ... அம்மா ரொம்ப

பயந்து போய் இருக்காங்க.. என்ன பிரச்சனை " என்ற தம்பியின் வினாக்களுக்கு நான் விடையினை

பூட்டுவதுற்குள்...

" விஜி . விஜி .. எங்க தான்டா இருக்க ... என்ன பண்ற .. சாப்டியா .. எதோ பிரச்சனைன்னு சொன்ன " என்று அம்மா தவிப்பினில் முக்கிய பல வினாக்களை அடுக்கையில் , காற்றின் அசைவை கூட மிஞ்சி இருக்க கூடும் .. அவள் உடலின் நடுக்கம்... என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குழப்பமெனும் ஒற்றையடிப் பாதையில் மீண்டும் பயணித்து , என் மனதின் அடர்வனத்திற்குள் புகுந்து ,ஓர் சலனமில்லா நீரோடையை கண்டெடுக்கிறேன் .

" ம்மா , ம்மா , ஏம்மா பயப்புடுற , நீ பயந்து போற அளவுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல மா.......,

நான் உங்கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேனே மா , என்கூட படிச்ச பையம் இராஜ்குமார் . அதா மா நம்ம

வீட்டுக்கு கூட அடிக்கடி வருவானே , அவன் சொந்த ஊர் கூட சென்னைன்னு சொல்லுல " என்று

ஆரம்பித்ததும் .. " ஆமா ஆமா சொல்லுடா " என்றாள் அம்மா . " அவன் தான் மா எதோ லவ்

பிரச்சனைன்னு .. தூக்கு போட்டுனா , அப்புறம் எப்படியோ காப்பாத்திடாங்க , அவன பாக்க தான் மா வந்த ,

ஏன்டா இப்படி பண்ணணு கேட்டா .. அவங்க வீட்டுல அவன் லவ்வ ஒத்துகிலையா மா .. நான் ஊருக்கு

வந்து சொல்லுற மா விவரமா " என்று ஒரு பொய்யை தன் காதலுக்கு வருங்காலத்தில் ஏதுவாகவும் , தன்

அம்மாவின் அச்சத்தை அதிகரிக்காமல் அழித்துவிடவும் வேறு வழியின்றி தூவிவிட்டேன் .

நான் தூவிய வார்த்தைகள் என் அம்மாவை வியர்வைக் கடலுக்குள்ளிருந்து மீட்டெடுத்து , நிம்மதி படகேற்றி , மின்விசிறி காற்று வீசும் கரைதனில் , சுய நினைவிற்கு திருப்புவதாய் உணர்கிறேன் ... " அப்பா இதா பிரச்சனையாடா " என்ற அவள் பெருமூச்சில் முக்கி துறந்த ஒற்றை வார்த்தையில் ,

அம்மாவின் பாசத்திற்குள் புகுந்து உச்சத்தை உணர்ந்துக் கொண்டிருக்கையில் ., " விஜி " என்ற என்னவளின் துடிப்பினில் விளைந்த அமுது நிறைந்த என் நாமம் , காதலெனும் நந்தவனத்திற்கு நொடிப் பொழுதில் இடம் பெயந்து , மீண்டும் மீண்டும் முத்தத்தை களவாட தூண்டியது. காதல் வானில் மகுடம் சூடிய இரு ஜீவன்கள் , காதல் சுவாசத்தை ஒவ்வொரு கணத்திலும் உலகறிய பறை சாற்றிக் கொண்டே தம் காதலின் துளிர்விடம் நோக்கி பயணிக்கிறது . ( கோவை செல்ல இரயிலை நோக்கி ..)

அவள் கரம் என் கரத்துடன் பிணைத்துக் கொண்டே நடக்கையில் , எதோ ஒருவகை உணர்ச்சி , ஒரு பரவசம் , வாழ்வினையே வென்றதாய் ஓர் உணர்வு ( சரியாக எனக்கு சொல்ல தெரியவில்லை ,,, இல்லை இல்லை அதை வார்த்தைகளில் என்னால் கோர்க்க முடியவில்லை.. ம்ம்ம்ம்ம் ..... எல்லாம் காதலருக்கு புரியும் .... ) என் மனதில் ஊறி ஊறி எங்கோ என்னை மிதக்க செய்கிறது . அவளையும் அவ்வுணர்வு வெகுவாக தாக்கியும் இருந்திருக்கும்

என்னை அறியாமலே என் கரம் விஷாந்தியை இறுக்கமாக பற்றிக் கொண்டு நடக்கையில் " விஜி .. அப்பா ரொம்ப பயந்து போயி இருப்பார் டா " என்ற அந்த வார்த்தை என்னை தூக்கிப் போடா செய்துவிட்டது . அவள் தந்தைக்கு விபந்து என்று ஆதி சொன்னானே என்ன ஆனதோ என்று ஒரு புறம் ... அவள் தந்தைக்கு விபத்து என்று எப்படி அவளிடமே சொல்வது என்று மறுபுறம் ...

அவளிடம் எப்படி சொல்வதென்று தெரியாமல் மீண்டும் பதற்றத்திற்குள் குடிபெயர்ந்து , நடுக்கத்தை என்னுடல் முழுவதும் தைத்துக் கொண்டு திணறிப் போனேன். அனைத்தையும் சிறு நொடியில் புன்னகை தேசத்தின் ஆழப் பகுதியில் புதைத்துவிட்டு .. கொஞ்சம் புன்னகையையும் பறித்துக் கொண்டு , எதையும் முக பாவனத்தில் வெளிப்படுத்தாமல் மிக இயல்பாக " ஆமாம் விஷா " என்றேன்

அவள் " விஜி தாகமா இருக்கு " என்றதும் அருகில் உள்ள கடையில் தண்ணீர் பாட்டிலை வாங்கி திரும்புவதற்குள் விஷாந்தினியைக் காணவில்லை. என் விழிகளிரண்டும் விழியறையை துறந்து பார்வை நீளம் எட்டும் தூரம் வரை அவளை தேடி அலைகிறது. கழுத்திற்கும் வயிற்ருக்கும் மத்தியில் (சரியாக நெஞ்சுக்கு பக்கத்தில் ) உணர்வளைப் பிரளயங்கள் கணக்கற்று துளிர்ந்து துளிர்ந்து முதிர்கிறது.

எங்கோ ஆள் நடமாட்டமில்லா கானகத்தில் என் புஜங்கள் துண்டிக்கப்பட்டு , வெளியேறும் பாதைகள் சிதைக்கப்பட்டு , தடையமின்றி தகர்க்கப்பட்டு என் மூளை திரவங்கள் வறண்டு போக , என் தேகத்தின் சக்தியெல்லாம் துடிப்பெனும் சூறாவளியில் தும்சமாகிறது.

" வி .. வி .. விஷா ............. விஷாந்தினி ................... " என்று என் உயிர் துளியின் மொத்த உருவத்தின் நாமத்தினை என் உதடுகள் உரும்பிக்கொண்டிருக்க... எங்கிருந்தோ வந்த ஒரு போலீஸ் காரன் என்னை துப்பாக்கி முனையில் சிறையெடுக்கிறான் ... என் முதுகின் பக்கம் நின்றவாறே ....

தொடரும் ....

.....................................-உதயா

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்த பாகம் தொடர விரும்புவோர் , தோழர் திரு . கவிஜி அவர்களை அணுகுங்கள் .
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எழுதியவர் : உதயா (17-Nov-15, 4:51 pm)
பார்வை : 191

மேலே