மருகேலரா - ஜயந்தஸ்ரீ

'ஜயந்தஸ்ரீ' ராகத்தில் அமைந்த ’மருகேலரா ஓ ராகவா!’ என்ற தியாகராஜ கீர்த்தனையை குரலிசைக் கலைஞர் V. சங்கரநாராயணன் தொலைக்காட்சியில் அருமையாகப் பாடியதை கேட்டேன்.

அந்தப் பாடல் பலமுறை கேட்டிருந்தாலும் ராகம் என்னவென்று அறிய வலைத்தளத்தில் தேடிய போது அது 'ஜயந்தஸ்ரீ' ராகம் என்றறிந்தேன். இப்பாடலை அநேகக் கலைஞர்கள் – எஸ்.ஜானகி, நித்யஸ்ரீ மகாதேவன் போன்றோர் பாடக் கேட்டிருக்கிறேன்.

மேலும் ஜயந்தஸ்ரீ ராக மெட்டிலேயே அந்தப் பாடலை முன்னொரு சந்தர்ப்பத்தில் பாவேந்தர் பாரதி தாசன் ’மறைவென்ன காண் ஓ ராகவா?’ என்று தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருப்பதை அறிந்தேன்.

செந்தமிழ்க் காஞ்சி என்ற நூலில் மொழியியற் செல்வர் பேரறிஞர் தேவநேயப் பாவாணர் கிறித்துவக் கீர்த்தனைகள் என்ற தலைப்பில் 'திருமுழுக்கு' என்ற துணைத் தலைப்பில் ’காற்றையும் கடலையும் அதட்டினது’ என்று பெயரிட்டு மருகேலரா என்ற ஜயந்தஸ்ரீ ராக மெட்டிலேயே எழுதியிருக்கிறார்.

மூன்று பாடல்களையும் கீழே கொடுத்திருக்கிறேன்.

ஜயந்தஸ்ரீ ராகம் ஆதி தாளம்

1.மருகேலரா ஓ ராகவா!

பல்லவி

மருகேலரா ஓ ராகவா!

அநுபல்லவி

மருகேல - சரா சர ரூப
பராத்பர ஸூர்ய ஸுதாகர லோசனா

சரணம்

அன்னி னீ வனுசு அந்தரங்கமுன
தின்னகா வெதகி தெலிஸிகொண்டி னய்யா
நின்னெ கானி மதி னென்னஜால னொருல
நன்னு ப்ரோவவய்யா தியாக ராஜனுதா (மருகேலரா)

2. மறைவென்ன காண் மருகேலரா மெட்டு

ஜயந்தஸ்ரீ ராகம் ஆதி தாளம்

பல்லவி

மறைவென்ன காண் ஓ ராகவா?

அனுபல்லவி

மறைவேன் அனைத்தின் உருவான மேலோய்
மதியோடு சூர்யன் விழியாய்க் கொண்டோய் (மறை)

சரணம்

யாவும் நீயே என்றென் அந்த ரங்க மதில்
தேவிரத்தில் தேடித் தெரிந்துகொண்டே னையா
தேவரிரை யன்றிச் சிந்தனையொன் றில்லேன்
காக்கவேண்டும் என்னைத் தியாகராஜன் அன்பே! (மறை)

3. காற்றையுங் கடலையு மதட்டினது

மருகேலரா' என்ற மெட்டு

ஜயந்தஸ்ரீ ராகம் ஆதி தாளம்

பல்லவி

சரணாகதி சார்ந்த தேம் பதீ

அநுபல்லவி

சரணாவ தாரீ சருவாதி காரீ
புயன்மோ திவாரி பொறும் ஆதரி (சரணா)

சரணம்

கன்னிகை குமார கண்திறந்து பாரே
மன்னுலக மூட மலிதரங்க மையா
இன்னே மடிகின்றோம் என்னவே பன்னிருவர்
அந்நிலை கடிந்தாய் அலைமாருதம் (சரணா)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Feb-16, 2:38 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 177

சிறந்த கட்டுரைகள்

மேலே