நடமாடும் நதிகள் -34

5 - 7 - 5?
36 - 24 - 36 !!
இல்லை, வேலைக்காரி !
# # # # # # # # # # # # # #
சாலையில் தூங்குகின்றன
ஏழைகளுடன்
நிழல்களும்

மழையில் நனைகின்றன
செம்மறி ஆடுகள்
கம்பளிக்குள் மேய்ப்பன்

விழுங்கி கொண்டிருக்கிறது
பாம்பு-
தவளைச் சத்தம்.

விலையில்லா உணவு -
மகிழ்ச்சியில்
பட்டுப் புழுக்கள்

சிலந்தி வலையில்
தேனீயின் சடலம்
தற்கொலை ?

"சுதந்திர தின"ப் புறாக்கள்
நம்பிக்கையுடன்-
புறாக்காரன்

சக்கரை ஆலையின் முன்
சக்கைகள்-
" நிலுவையை உடனே வழங்கு"


அகழ்வராய்ச்சி
முது மக்கள் தாழி ?
இல்லை , தானியக் குதிர் .

எல்லோர் வீட்டு முன்பும்
நதியும் மரங்களும்
குழந்தைகள் வரைந்தது

தோட்டக்காரன் தூங்குகிறான்
களவு போகுது
பூ வாசம்

எனக்கு எழுத வாய்ப்பளித்த திரு ஜின்னா அவர்களின் தாள் பணிகிறேன் .
ஒத்துழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி !

( நான் இத்தளத்திற்கு மிக சமீபத்தியன். இந்த படைப்புகளில் ஏதெனும் தங்களுடையதை பிரதிபலித்தால் , அதற்கு காரணம் எண்ணங்கள் ஒரே அலை வரிசையில் அமைந்ததே அன்றி ,பிரதி எடுத்ததல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ள விழைகிறேன்)

எழுதியவர் : நாராயணசுவாமி ராமச்சந்திர (10-Mar-16, 8:59 am)
பார்வை : 172

மேலே