காமராஜர்

தேசிய அரசியலை நிர்மாணித்த ஒரே தமிழர்.
தேசமெல்லாம் புகழ் மண்டிக்கிடக்கும் ஒரே தலைவர் .
தமிழகத்தில் பல தொழில்புரட்சிக்கு வித்திட்டவர்.
பள்ளிபடிப்பை முடிக்காதவர்-பலரின் பள்ளிபடிப்புக்கு வித்தானவர்.
ஏழ்மையில் வாடியவர்க்கு உணவளித்த வள்ளல்.
ஆட்சியில் பல புதுமைகளை புகுத்தியதோடு -
புவியலை கற்று பல அணைகளையும் கட்டியவர்.
அடிபணியாது நடைபோட்ட ஆன்றோர்.
இறுதிவரை தனக்கென வாழாது -மக்களுக்குகே உழைத்த உன்னத மனிதன்.
சொத்துகள் சேர்க்காமல் -சொந்தங்களை தேடாமல் -மக்களை நேசித்து சுவாசித்த மகான் .
சுதந்திர வானின் துருவநட்சத்திரமான -காமராஜரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
-கல்விகண்திறந்தவர்
கர்மவீரர்
கருப்பு காந்தி
ஏழை பங்காளர்
தென்னாட்டு ஜின்னா
எளிமையின் சிகரம்
என பலவாறுபோற்றப்படும் -காமராஜர்
இப்படி என்னோடைய 7ஆம் அகவையில் அவரை பற்றி பேசத்தொடங்கி பள்ளியளவில் 1-பரிசு பெற்றேன்...பின் பல இடங்களில் அவரை பற்றி பேசியுள்ளேன்,எழுதியும் உள்ளேன் ...
என்னுடைய மனம்கவர்ந்த ஆக சிறந்த அரசியல் தலைவர்.

எழுதியவர் : மணிவேல் .A (15-Jul-17, 9:33 am)
சேர்த்தது : மணிவேல்
Tanglish : kaamaraajar
பார்வை : 1689

மேலே