எழுத வேண்டும் என்ற எனது ஆர்வம் (பகுதி 1)

எழுத வேண்டும் என்ற ஆர்வத்தினால் என்னுடைய 66 வயதில் பிப்ரவரி 2011 ல் சில கட்டுரைகள் எழுதி வெளியிடும் வாய்ப்பு 'கீற்று' வலைத் தளம் வழியாகக் கிடைத்தது. அவர்களும் பரிசீலனைக்குப் பின் தகுதியிருப்பின் வெளியிட்டார்கள்.

ஆனால் ஜூன் 2011 லிருந்து சுமார் 300 தமிழ் கவிதைகள் 'எழுத்து' தளத்திலும், 140 ஆங்கிலக் கவிதைகள் poemhunter.com தளத்திலும் வெளியிட்டிருக்கிறேன். அனைத்தும் எந்தவித பரிசீலனையும் இன்றி வெளியாகின்றன. அதனால் இத்தளங்களில் எழுதும் எல்லோரும் கவிஞர்கள் என்றும், நல்ல கவிதைகள் என்றும் ஒருவரையொருவர் பாராட்டிக் கொண்டிருக்கிறோம்.

எழுத வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் கொண்ட வளரும் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களுக்கு ஊக்கம் தரும் தளம் 'எழுத்து' என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நம் ஒவ்வொருவரின் கவிதையும் பிரபல பத்திரிக்கைகளிலும் வெளியாகி அங்கீகாரம் பெற்றால் அதுவே நமக்குப் பெருமை.

இத்தளத்தில் G.S.விஜயலட்சுமி இசை அறிவு உள்ளவராக இருக்க வேண்டும். அவர் எழுதும் பாடல்கள் சிறப்பாக உள்ளன. மற்ற எழுத்தாளர்களின் கருத்துக்களைப் பற்றி விமர்சிக்க ஏதுமில்லை.

நாம் ஒவ்வொருவரும் நம் கவிதைகளை அவரவருக்குள்ளேயே சுய விமர்சனம் செய்வதில் தவறில்லை. சிற்சில மாற்றங்களும் செய்து கொள்ளலாம். அதற்கான edit செய்யும் வசதியும் இருக்கிறது.

கவிதைகள், குறிப்பாக கசல், ஹைக்கூ, லிமரிக்கூ, சென்ரியு, குறட்கூ, சீர்க்கூ என்ற கவிதை வடிவங்களை எப்படி எழுத வேண்டும் என்று விளக்கத்துடன் ம.ரமேஷ் 'எழுத்து' தளத்தில் எழுதி வந்தது பயனுள்ளதாக இருந்தது.

இத்தளத்தில் எழுதுபவர்களில் நூற்றுக்கு தொண்ணூறு பேராவது எழுத்துப் பிழையின்றி எழுதுவதில்லை. அநேகம் பேருக்கு 'தனிவிடுகை'யில் பிழைகளை நாசூக்காகச் சுட்டிக் காட்டி, edit செய்யும் வழிமுறையும் நான் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். ஸ்ரீ, ஹா, ஷா, க்ஷ் என்று ஒவ்வொரு எழுத்தையும் தனித் தனியாக edit செய்ய முடியும். பலரும் சரி செய்து சிறப்பாக அமைத்திருக்கிறார்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Mar-12, 6:26 am)
பார்வை : 304

சிறந்த கட்டுரைகள்

மேலே