தமிழ் மொழி...

தமிழ் மொழி...
தடுக்கி விழுந்தால் மட்டும் அ... ஆ...
சிரிக்கும் போது மட்டும் இ... ஈ...
சூடு பட்டால் மட்டும் உ... ஊ...
அதட்டும் போது மட்டும் எ... ஏ....
ஐயத்தின் போது மட்டும் ஐ...
ஆச்சர்யத்தின் போது மட்டும் ஒ... ஓ...
வக்கணையின் போது மட்டும் ஒள...
விக்களின் போது மட்டும் ஃ ...
என்று தமிழ் பேசி மற்ற நேரம்
வேற்று மொழி பேசும்
தமிழர்களிடம் மறக்காமல் சொல்
உன் மொழி
தமிழ் மொழி என்று... !!!





செ. சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி, மைலம் தமிழ் கல்லூரி,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.

எழுதியவர் : செ. சத்யாசெந்தில், முதுகலை (4-Aug-12, 7:53 pm)
Tanglish : thamizh mozhi
பார்வை : 649

மேலே