அவள் வீட்டு கண்ணாடிகள்...!!!

உலக அழகியானது
உன் வீட்டு கண்ணாடி..!!
நீ முகம் கழுவிய நொடிகளில்
சிதறிய சிரிப்புகளையும்,
கிள்ளிய முகபருக்களையும்,
வெக்கத்தின் பிம்பங்களையும்,
உன் அனுமதியின்றி திருடி
தன்னை அழகியாக்கி விட்டது..!!
நீயோ சத்தமில்லாமல்,
அடுத்த உலக அழகியை
உருவாக்க போய்விட்டாய்..!!!