மனதுக்குள் புயல் (4)

வீட்டிற்குச் செல்ல 45 நிமிடங்கள் ஆகும் எனக் கணக்கிட்டு சொன்னான் நகுலன். நான் அவன் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி விசாரித்தேன். இருவரும் எங்களைப் பற்றி பேசிக்கொண்டோம். பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

என் வீட்டை நெருங்கிவிட்டோம் எனத் தெரிந்தது… இன்னும் ஓரிரு நிமிடங்களே இருந்தன…

சொல் காயு, உன் காதலைச் சொல் காயு!! என்றது மனம்.
ஆனால் வாயோ வேறு எதையோ கேட்டது…

நீ எங்கிட்ட ஏதாச்சும் சொல்லணுமா நகு??

உடனே நகுலன், அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே…..

“ மேம், வேர் இஸ் யோர் ஹவுஸ்??? என வாடகைக்கார் அங்கிள் கேட்டதும் என் கவனம் அவர்பக்கம் திரும்பியது.
“டேர்ன் லெஃப்ட் அங்கிள், ஸ்டோப் அட் தேட் பஸ் ஸ்டோப் ”, என்றேன்… கார் என் வீட்டின் அருகில் சென்று கொண்டு இருக்கிறது…

என் மனம் தவித்து போவதை உணர்ந்தேன்...

நீ ஏதாச்சும் எங்கிட்டருந்து மறைக்கிறியா ??

இல்லையே….

நீ எங்கிட்ட என்னமோ மறைக்கிற மாதிரியே எனக்குத் தோணுது...

அப்படி ஏதும் இல்லையே, நான் என்ன மறைக்கிறேனு நீயே சொல்லேன்…

ஹேய் சரி, என் இடம் வந்திருச்சு.. … நான் வரேன்... உடம்ப பார்த்துக்கோ!
இன்னொரு நாள் சந்திக்கலாம்….பாய் நகுலன்…

------
நான் பேசிய கடைசி வார்த்தை ‘பாய் நகுலன்’….
என் கண்ணீர் என் கன்னத்தை நனைத்தது மட்டுமல்லாது என் காதுக்குள்ளும் புகுந்துகொண்டது….

என் கைப்பேசியில் இருந்த அவனது புகைப்படத்தைப் பார்த்து கேட்டேன்…

நகு, என் மேலே உனக்குக் காதல் இருக்கானு தெரிஞ்சுகிட்டு என் காதலை சொல்லலாம்-னு நெனச்சேன்….. சொல்றதுக்கு முன்னாலயே செத்துபோகும்னு நெனக்கலே டா…

முந்தி எனக்கு உன்னைப் பிடிக்காது, அப்பலாம் என்னை நெருங்கி வந்தே நீ…
இப்ப உன்னை என் உயிர் அளவுக்குப் பிடிக்கும்போது உனக்கு என்னைப் பிடிக்கலியா?? இல்ல நான் தப்பா எடுத்துக்குவேனு எங்கிட்டருந்து உண்மையை மறைக்கிறியா??

நகு, நான் உன்னை விரும்புரேன் டா…. உனக்கும் என்னைப் பிடிக்கும்-னு நானே தப்பா நெனச்சிக்கிட்டேனா?? என் காதல் பொய்யா போச்சா??
நகு, எனக்கு ரொம்ப வலிக்குது டா….
உன் மெசேஜைப் பார்த்தோனே செத்துடனும்போலே இருக்குடா…..

என்னால் முடிந்த வரை சத்தமில்லாமல் அழுதேன்…. அழுது அழுது கண்ணீரும் வற்றிப்போய்விட்டது…

இனிமேல் உன்னை பார்க்கும்போது எனக்கு என்ன தோணும்?? உங்கூட இயல்பா நான் பேச முடியுமா?
இறைவா…….
இனிமேல் நகுலனைச் சந்திக்கிற வாய்ப்பே எனக்கு ஏற்படுத்தாதே …..
நான் அவன்கிட்ட பொய்யா சிரிச்சு நடிக்க விரும்பல…. இறைவா…….

வேண்டிக்கொண்டிருக்கும்போதே என் விரல்கள் தானாக கைப்பேசியில் இருந்த நகுலனின் படத்தை டிலீட் செய்கிறது…
என் மனம் என் விரல்களைப் பார்த்து கைக்கொட்டி சிரிப்பதை உணர்கிறேன்….
என் நகு-வின் முகம் என் இதயச்சுவரில் அழகிய சிலையாய் வடிக்கப்பட்டு இருப்பதை என் விரல்கள் அறியவில்லைபோலும்…!! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்….

எழுதியவர் : Gulabi Desik Mony (3-Dec-12, 12:23 pm)
பார்வை : 277

மேலே