எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

. கற்றலும் குணநலமும் குழந்தைகளின் கற்றல் திறன் என்பது...

. கற்றலும் குணநலமும் குழந்தைகளின் கற்றல் திறன் என்பது தாயின் வயிற்றிலிருந்து பிறந்த கணம் முதல் ஆரம்பிக்கிறது. தன்னுடைய ஒவ்வோர் அசைவிலும் பெற்றோர், சுற்றியுள்ளவர்களிடம் கற்றுக்கொண்டவற்றையே குழந்தை பிரதிபலிக்கிறது. எனவே மரபணுக்கள் மட்டுமல்லாது சமூகத்திடமிருந்து பெறப்படும் விஷயங்களும் ஒரு குழந்தையின் குணநலனைத் தீர்மானிக்கின்றன. பெரும்பாலான நேரத்தில் ‘இவனை டிவி பார்க்கவிட்டால் ஒரு தொந்தரவும் இருக்காது’ எனக் குழந்தைகளின் போக்குக்கு விட்டுவிடுகிறோம். நம்மைத் தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி என்பதே இதன் பின்னணிக் காரணம். கோழிப்பண்ணைகளில் சென்று பார்த்தால் அங்கு உள்ள கோழிகள் 24 மணி நேரமும் குனிந்த தலை நிமிராமல் தீனி தின்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும். ஒரே மாதத்தில் கறிக்குத் தயாராகும் அளவுக்கு எடையும் கூடிவிடும். அது போலத்தான் இன்று கல்வியுடன் குணநலனையும் தயாராகும் அளவுக்கு எடையும் கூடிவிடும். அது போலத்தான் இன்று கல்வியுடன் குணநலனையும் வளர்க்க வேண்டிய கல்விக்கூடங்கள் பத்தாம் வகுப்பிலிருந்தே பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்களை மட்டுமே சொல்லிக்கொடுக்கும் ‘பிராய்லர் கூடங்களாக’ மாறிவருகின்றன. இதனால் குழந்தை வளர்ப்பைப் பற்றி கருத்தரங்கம் நடத்திச் சொல்லிக்கொடுக்க வேண்டிய அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. பெற்றோரின் பங்கு ஒரு குழந்தை பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்வதுதான் அடிப்படை பாடம். வேலைப்பளுவைக் காரணம் காட்டுவதைவிட, யாருக்காக இவ்வளவு உழைக்கிறோம் என்பதை யோசித்துப்பார்த்தால், இதில் உண்மை விளங்கும். குழந்தைகள் எதிர்பார்ப்பது உங்கள் சம்பாத்தியத்தைவிட அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரத்தைத்தான். ‘பைக் வேண்டும், விலையுயர்ந்த வாட்ச் வேண்டும் என எதிர்பார்க்கிறான்/ள், நான் அதிகம் சம்பாதித்தால் தானே அதை நிறைவேற்றி வைக்க முடியும்’ என்று நீங்கள் கேட்கலாம். நியாயம்தான், ஆனால் சிறுவயதிலிருந்தே குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட்டுப் பாருங்கள். அவர்களுடைய எதிர்பார்ப்பு குறையும், உங்கள் நிலைமையை முழுமையாகப் புரிந்துகொண்ட குழந்தையாக, ஆக்கபூர்வமான குறிக்கோளைக் கொண்டவராக இருப்பார்கள். குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலைதான். பொறுமையைக் கையாண்டு ரசித்துச் செய்தால் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும். அன்றாடம் நடக்கும் விஷயங்களில் சில மாற்றங்களைச் செய்தாலே பெரிய விளைவுகளை ஒரு குழந்தை பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்வதுதான் அடிப்படை பாடம். வேலைப்பளுவைக் காரணம் காட்டுவதைவிட, யாருக்காக இவ்வளவு உழைக்கிறோம் என்பதை யோசித்துப்பார்த்தால், இதில் உண்மை விளங்கும். குழந்தைகள் எதிர்பார்ப்பது உங்கள் சம்பாத்தியத்தைவிட அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரத்தைத்தான். ‘பைக் வேண்டும், விலையுயர்ந்த வாட்ச் வேண்டும் என எதிர்பார்க்கிறான்/ள், நான் அதிகம் சம்பாதித்தால் தானே அதை நிறைவேற்றி வைக்க முடியும்’ என்று நீங்கள் கேட்கலாம். நியாயம்தான், ஆனால் சிறுவயதிலிருந்தே குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட்டுப் பாருங்கள். அவர்களுடைய எதிர்பார்ப்பு குறையும், உங்கள் நிலைமையை முழுமையாகப் புரிந்துகொண்ட குழந்தையாக, ஆக்கபூர்வமான குறிக்கோளைக் கொண்டவராக இருப்பார்கள். குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலைதான். பொறுமையைக் கையாண்டு ரசித்துச் செய்தால் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும். அன்றாடம் நடக்கும் விஷயங்களில் சில மாற்றங்களைச் செய்தாலே நல்லது

நாள் : 6-Feb-16, 6:35 am

மேலே