மனிதன் வாழ்க்கைக்கு அவசியமான அறம், பொருள்,இன்பம் ஆகிய மூன்றையும்...
மனிதன் வாழ்க்கைக்கு அவசியமான அறம், பொருள்,இன்பம் ஆகிய மூன்றையும் விளக்கும் திருக்குறளை உலகுக்கு தந்த மொழி தமிழ் மொழி.ஆம்! தமிழருக்கு மட்டும் அல்ல; இந்தியருக்கு மட்டும் அல்ல; உலகுக்கே! ஏனெனில் திருக்குறளின் மகிமை உணரப் பட்டதால் அது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டு சிலரால் வெளியிடப் படுகிறது. மற்ற மொழிகளிலும் மொழி பெயர்க்க முயற்சிகள் நடக்கிறது.
பக்தியை பரப்ப, முருகக் கடவுளை போற்றும் திருப்புகழ், சிவனைப் போற்றும் தேவாரம், திருவாசகம். திருமாலைப் போற்றும் திவ்வியப் பிரபந்தம் போன்ற நூல்களை வெளியிட்ட பெருமை உடையது தமிழ் மொழி!
சுதந்திர தாகத்தை அனல் பறக்க வெளிப்படுத்திய பாரதியார் பாடல்களைக் கொண்ட பெருமைஉடையது தமிழ்!
தேசிய ஒருமைப் பாட்டை " சிந்து நதியின் மிசை நிலவினிலே" என்ற பாடல் மூலம் பாரதியார் பரப்ப முனைந்த பெருமையைக் கொண்டது தமிழ் மொழி! அந்தப் பாடலின் வரிகளை தன் மாநில மொழியில் மொழி பெயர்த்து படிக்கும் எந்த இந்தியனும் தேசிய ஒருமைப் பாட்டை நோக்கி விசையுடன் உந்தப் படுவான். அத்தனை உணர்ச்சிகரமான வரிகளைக் கொண்டது அந்தப் பாடல்.
இத்தகைய தமிழைப் போற்றி வணங்க வேண்டும்! தமிழில் ஆங்கிலக் கலப்பு தவிர்க்க முடியாது எனினும் அளவுக்கு மீறி கலந்து தமிழை சின்னாபின்னமாக்கி விடக் கூடாது என்பது என் கருத்து.