எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

Geeths - எண்ணம் (public)
18-Sep-2017 12:33 pm

எண்ணம் காணொளி போட்டி

தோழர்களுக்கு வணக்கம்!
எழுத்து நடத்தும் எண்ணம் காணொளி போட்டி
தொடங்கும் நாள் - 18-09-2017
முடியும் நாள் - 27-09-2017


தோழர்களின் விருப்பப்படி போட்டி இறுதி நாள் 27 வரை நீடிக்கப் பட்டுள்ளது.

விதிமுறைகள்:
  • சமர்ப்பிக்கபடும் காணொளி உங்களது சொந்த காணொளியாக மட்டுமே இருத்தல் வேண்டும்.
  • காணொளி ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலா

    மேலும்

    நிச்சயம் நீட்டிக்கப்படும் 21-Sep-2017 3:42 pm
    போட்டி நடைபெறும் காலத்தையும் கொஞ்சம் நீடிக்கலாமே! இதுவரை போட்டியின் விதிமுறைகளை தழுவி வெறுமனே மூன்று காணொளிகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. 21-Sep-2017 11:40 am
    மன்னிக்கவும் தோழரே! கண்டிப்பாக இன்று பிழை திருத்தும் செய்து அனைவரும் பதிவிடும் பாடி மாற்றி அறிவிக்கப்படும். 21-Sep-2017 10:53 am
    மாற்றத்தை தான் எதிர்பார்க்கிறோம் ஆனால் எங்கும் எப்போதும் ஏமாற்றம் தான் அடைகிறோம். கடந்த காலத்தை நினைக்கும் போது நிகழ்காலத்தில் அவைகளை மீட்க முடியாது என்பதே உண்மை. இனி இருக்கின்ற சூழ்நிலையில் ஓர் ஆரோக்கியமான சூழ்நிலை இங்கு உருவாகுமா என்று என்னை போல் பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால் தனித்துவமான எண்ணங்களும் கட்டமைப்பும் இங்கு தான் இருக்கிறது என்பது தனித்துவமான அடையாளம். சுயமாக படைப்பாளிகள் செயற்படும் சுதந்திரம் எமது தளத்தில் தான் இருக்கிறது. நல்ல கவிதைகள் வறண்ட நிலம் போல ஆகக் கூடாது அவைகள் அருவிகள் போல் என்றும் பலரின் உள்ளங்களில் நீந்திக்கொண்ட இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். சுயநலம் என்று பலரும் நினைக்கலாம் ஆனால் என்னை புரிந்த ஒரு சிலர் நிச்சயம் அதனை வெறுப்பார்கள் என்பதே என் நம்பிக்கை. 21-Sep-2017 10:30 am

நடிகனை கடவுளாக ...
அரசியல்வாதியை கடவுளாக பார்ப்பவர்கள் ....
சாமியாரை நம்புபவர்கள் ....
ஏழைக்கு உணவிடவில்லை வீணாக பால் அபிஷேகம் ...
கடவுள் கேட்டதா?
நீ ரசிக்கலாம் அதீத பற்று தான் ஆபத்து ,...
நடிகன் நடிப்பில் அரசியல் செய்கிறான் ....
அரசியல்வாதி அரசியலில் நடிக்கிறான் ....
இயற்கையை அழித்து விட்டு மழை வேண்டினால்  எப்படி ?
கடவுள் கேட்டதா உன்னிடம் காணிக்கை செலுத்து என்று ?
கடவுள் கேட்பதெல்லாம் உண்மை மட்டுமே ....
இயற்கையை அழிக்காதீர் ...இயற்கை தான் நம் வாழ்வு ,நம் கடவுள்....

மனதை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் ....
நிம்மதி கிடைக்கும் ...

எளிமையான காமராசரே பஞ்சத்தை போக்க
சீமை கருவேல மரங்களை பற்றி அறியாமல் தூவ சொல்லிவிட்டார் ...

எல்லாவற்றையும் தீர ஆராய்ந்து சிந்தித்து முடிவெடுங்கள் ...
நல்லது செய்ய நேரம் காலம் தேவை இல்லை ...வழி தேவை இல்லை ...விளம்பரம் தேவை இல்லை ....
நீ பெரிய இடத்தில் இருக்க வேண்டும் என்றும் அவசியம் இல்லை ...நீ இருக்கும் இடத்திலேயே உன்னை சுற்றி இருப்பவருக்கு உதவலாம் ...
நன்றியை எதிர்பார்க்காதே ,...நன்றியை சொல் ...

எது வாழ்க்கை என்பதை அறிந்து வாழுங்கள் ...பணத்தை கொள்ளை அடிக்காதீர்கள் ....
பணம் மட்டும் வாழ்க்கை இல்லை ....
கல்வி வள்ளல்கள் - ஹா ஹா - மகா திருடன்

மேலும்

நன்றி தமிழே ... 24-Jun-2017 8:04 pm
நன்றி தமிழே ... 24-Jun-2017 8:02 pm
நீ ரசிக்கலாம் அதீத பற்று தான் ஆபத்து ,.. BRAVO ! நடிகன் நடிப்பில் அரசியல் செய்கிறான் .... அரசியல்வாதி அரசியலில் நடிக்கிறான் .... நிகழும் மங்களகரமான அரசியலின் பிரதிபலிப்பு . இயற்கையை அழித்து விட்டு மழை வேண்டினால் எப்படி ? கடவுள் கேட்டதா உன்னிடம் காணிக்கை செலுத்து என்று ? கடவுள் கேட்பதெல்லாம் உண்மை மட்டுமே ..----யா சீரிய சிந்தனைகள் ; பாராட்டுக்கள் தாயே ! அன்புடன், கவின் சாரலன் 27-May-2017 8:31 am
விழிப்பு உணர்வுப் படைப்பு சிந்தனைக் கருத்துக்கள் . தொடரட்டும் தங்கள் இலக்கிய சிந்தனைக் களம். 26-May-2017 8:28 am

மேலே