எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

  கலாச்சாரம் என்ற பெயரில்
எத்தனையோ பேரை அடிமை செஞ்சாச்சு
கலாச்சாரம் என்ற பெயரில்
மனிதத்தை மண்ணுக்குள் புதைச்சாச்சு
கலாச்சாரம் என்ற பெயரில்
உயிர்களின் உணர்வுகளை காய படுத்தியாச்சு
கலாச்சாரம். அந்த கலாச்சாரம்
எது தான் அந்த கலாச்சாரம்

"நம்ம கலாச்சாரம் தான் மிக சிறந்தது
உலகிலேயே மனிதர்களுக்கு அது தான் உகர்ந்தது"
என்று பெருமை பேசுவோரை பார்த்தேன்

ஒருவன் தாயை தெய்வம் என்று சொன்னான்
அவனே அவளை மாதம் நான்கு நாள்
கொள்ளையில் உக்கார வைத்தான்

மகளை ஆத்தா என்று சொன்னான்
பூ பெய்திட்ட நாள் முதல் அவளை
அவனே சந்தை பொருள் ஆக்கினான்

காதலிக்கு கவிதைகள் ஆயிரம் பாடினான்
ஒரே ஒரு கேள்வி தான் கேட்டாள்
பதில் வரலை
பளார் என்று ஒரு சத்தம் தான் வந்தது

ஆண்களுக்கே உரிமை கொடுக்கும் இந்த கலாச்சாரம்
அதற்க்கு பெயர் மட்டும் கலா என்று பெண்ணின் பெயர்

விதவையின் கண்ணீரை துடைக்காத கலாச்சாரம்
புடவையின் சிலுவையில் பெண்களை அடக்கும் கலாச்சாரம்
இது தான் நம் கலாச்சாரம். உலகின் சிறந்த கலாச்சாரம்  

மேலும்

ஆங்கிலயேர்கள் நம் நாட்டினை அடிமை அடிமை படுத்த நினைத்த போது எந்த ஒரு சிரமமும் இல்லாமல் வடஇந்தியர்களை அடிமை படுத்தினார்கள். அவர்களின் ஆசை பணத்தின் மீதும் ஆங்கிலயேர்கள் தரும் அற்ப பதவிர்க்காகவும் அவர்களின் மொழி கலாச்சாரம் இதைப்பற்றி கவலை கொள்ளாமல் அவர்களோடு கை கோர்த்து மற்ற இடங்களை பறிக்க இவர்களும் உதவினார். அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தனர் தென் இந்தியர்கள். பணம் பதவி அனைத்தையும் விலை பேசி கூட முடியாத காளையர்கலாய் விளங்கினார்கள். தன் மொழிகாகவும் கலாச்சாரத்துக்காகவும் ரோஷத்திற்கும் உயிரையும் துச்சமாக நினைத்து உயிர் விட்டனர். நம் முன்னோர்களின் இரத்தம் இன்றும் நமக்கு ஓடுவதால் தான் நாமும் நம் மொழிக்காகவும் கலாச்சாரத்துக்காகவும் வடஇந்தியர்களிடம் போராடிக்கொண்டு இருக்கிறோம்..

மேலும்

எங்கே சென்று கொண்டிருக்கிறது கலாச்சாரம்
-----------------------------------------------------------------

பெண்ணே ...
தாயே ...
எங்கேயம்மா போய் கொண்டிருக்கிறாய் ...
ஐயோ வேண்டாமே ...
எப்படி சொல்வேன் ...
என்னால் உன்னை அப்படி பார்க்க இயலவில்லை ...
எப்படி சொல்வேன் ...
கைக்குட்டையை எடுத்து உடையாக உடுத்திக்கொண்டிருக்கிறாயே மா ...
மகளே ...
எல்லோர் கண்களும் ஓன்று போல் இருக்காது ...
காமத்தை கக்கும் நஞ்சுகள் ...
உன்னை தற்காத்து கொள் ...

உடை உடுத்துவது உன் உரிமை ...
அதில் யாரும் தலையிட  முடியாது .
ஒரு உடை  மரியாதையை தருகிறது
நீ உடுத்திய உடை பெண்களை முகம் சுழிக்க செய்கிறது ...
ஆண்கள் எல்லோரும் உன்னை கண்கொட்டாமல் காமத்தோடு பார்க்கிறது ...

நம் பண்பாடு இது இல்லையம்மா ...
வாழ்க வளமுடன் தங்கமே ...

மேலும்


மேலே