எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

‌அம்மா! என்று..

மதக்கலவரத்தில்

வெடிகுண்டுகள்...

வெடித்துச்சிதறின

மனித உடல்கள்...

இரத்தவெள்ளமாய்

மக்கள்...

தூரத்தில் ஓர் குரல்

அம்மா! என்று

எந்த மதச்சொல்?


மேலும்

தெளிவான சிந்தனை தெளிந்த நீரோடைப் போல நம் எண்ணங்களை பிரதிபலிக்கும் 

மேலும்

எல்லையில்லா
வானத்தில்
ஓய்வடையா
சிறகுகள்
சிந்தனைகள்……!

மேலும்

சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் --படைப்புக்கு பாராட்டுக்கள் 08-May-2018 4:40 pm

தயாரா நீ

சாளரங்கள் இல்லை 
சஞ்சாரங்கள் ஏதுமில்லை - பெரும்
சஞ்சலங்கள் மட்டுமே தனிச் சொத்து...

மாடங்களை ஆண்டோரும்
மடங்களில் உண்டோரும் - சீர்
பட்டங்கள் கொண்டோரும் 
பாமரத்தில் துவண்டோரும் 
மாற்று வசதிகள் காண்பதில்லை 
மண்ணறையில்...

இறையருள் மறந்தோம்
இம்மையதை
சுவைத்தோம்
தூதர் வழி
ஒழித்தோம்
தூய வேதம் 
கழித்தோம் - நம்
கப்றுகளை
இன்பங்கள் யாசிக்குமா...?

அழியும் நுட்பங்களை
ஆர்ப்பரித்தது போதும்
இறையோன் 
எண்ணத்தை 
ஈர்த்துக்கொள்...
உள்ளம் மயக்கும் 
ஊசல்களை உடைத்து;
எரிக்கும் நரகின் 
ஏவல்கள்களைப் பயந்து - ஏகன்
ஒருவனின்
திருப்தியாய் 
உள்ளத்தை நிரைத்துக்கொள்...

சாயைகள் ஏதுமில்லா
சூரியனின் உஷ்ணத்தில்
சருகாக எரிந்து;
பிளப்புக்கள் தெரியாது
எலும்புகள் நொறுங்கி;
நச்சுக்கள் பரப்பும் 
ஜந்துக்கள் தீண்டி;
முட்செடிகள் உணவாகி;
சீழ்கள் குடிநீராகி;
கொழுந்துவிட்டெரியும்
நரகவாழ்வு - இத்தனையும் கதையாக அல்ல
நாளை உன் 
வாழ்வாக...

படைத்தவனின் விசாரணைக்கு முன்
- உன்
சுயத்தை 
புடம்போட்டுக்கொள்...
பாவங்களை நினைந்து 
- தினமும்
மன்றாடு...

சிலவேலை,
நாளைய சூரியன்- உன்
கப்றுக்கு மேல் 
உதிக்கலாம்!

மேலும்


மேலே