எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

570 கோடி ரூபாய் பற்றிய செய்தியின் நம்பகத்தன்மை

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

திருப்பூர் அருகே பிடிபட்ட மூன்று கண்டெய்னர் லாரிகளில் பிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பணம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியாவிற்கு சொந்தமான பணம். வேறு ஒரு இடத்திற்கு எடுத்துச்செல்ல அனுப்பப்பட்ட பணம் என்று சொல்லப்படுகிறது. 570 கோடி ரூபாய் என்பது சிறிய தொகை இல்லை. ஏடிஎம்-ல் பணம் போட பணத்தை எடுத்துச் செல்லும் வண்டியில் கூட துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் (செக்யூரிட்டி) செல்வது வழக்கம். 570 கோடியை உரிய பாதுகாப்பு இல்லாமல் எந்த வங்கியாவது அனுப்பி வைக்குமா? பறக்கும் படையைப் பார்த்தவுடன் அந்த கண்டெய்னர்களின் டிரைவர்கள் அந்த மூன்று வண்டிகளையும் நிறுத்தாமல் ஓட்டிச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. பின்னர் விரட்டி ச் சென்று அந்த வண்டிகளை நிறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. வங்கியின் பணம் என்றால் அதிகாரிகள் நிறுத்தச் சொன்னவுடன் வண்டிகளை நிறுத்தி இருக்கவேண்டுமே!.இந்த 570 கோடி  ஒரு வங்கிக்குச் சொந்தமான பணம் என்று வெளியிடப்படும் செய்தி நம்பும்படியாக இல்லையே, 

மேலும்


மேலே