எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கோவத்தின் எல்லை..!
வேலை.. வேலை.. அலுவலகத்தில் மேனஜர் திட்டு., அதே வேகத்தில் நண்பர்களுடன் சண்டை.,
இந்த குழப்பத்தில் ஏ.டி.எம் பின் நம்பர் மறந்து மூன்று முறை தப்பா போட்டு ஏ.டி.எம் 'பிளாக்' என்று வர.,
வண்டியும் ஏதோ கோளாரால் இடையில் நிற்க எடுத்து எடுத்துப் பார்த்தும் மிதித்துப் பார்த்தும் கால் வலிதான் மிச்சம்.,
பேருந்தைப் பிடித்து பயணப்பட பக்கத்தில் குடிகாரனின் தள்ளுமுள்ளு வாந்தி குமட்டிக் கொண்டு வர.,
எப்படியோ வீடு வந்து சேர..
வந்தும் வராததுமாய் மனைவி "என் வீட்ல இருந்து அம்மா பேசுனாங்க கடன் பணத்தை கேட்டாங்க எப்ப தருவீங்க.?"..
அடங்காத கோவம் எகிறி பேச முற்பட.,
     "அப்பா.." என்றவாறு ஒரு சின்ன புன்னகை பூத்து "இங்க உட்காரு'பா" என்று ஜன்னல் பக்கத்தில் அமர வைத்து ஜன்னலை திறந்து விட...
சில்லென்று தென்றல் வர மடிமீது அமர்ந்தாள் குட்டி தேவதை..
அப்பா சட்டை பட்டனை கழற்றிக் கொண்டே "செம்மையா காத்து வருதுலப்பா.." என்றவள் முகத்தைப் பார்த்தான்..!
            முடிவு உங்கள் கையில்...

மேலும்

"பழைய பானை"

          அது நிலவொளியில் நிழல் தேடும் மனிதர்கள் பயணிக்கும் சென்னை நகரம். காலையில் பயணிப்பவர்களைவிட இரவுகளில் பறப்பவர்கள் அதிகம். அன்றும் விடியலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது மனிதனோடு சேர்ந்து கடிகாரமும். சீனி கிடைத்த எறும்புகள் கண் சிலிர்க்க ஓடுவது போலவும் அதையும் தோற்கடிக்க தயாரானது ஒரு இனம்.

     வந்தாரை வாழவைக்கும் சென்னை தன்னையும் வாழ வைக்கும் என்ற நம்பிக்கையோடு எல்லையை தொட்டான் கந்தன். லாரியில் ஏற்றி வந்த பானைகளை பந்துபோல வாங்கி அடிக்கி வைத்துக்கொண்டிருந்தான். அவனுக்கு உதவியாய் அவன் மனைவி அடுக்குகளை சரிபடுத்திக்கொண்டிருந்தாள், அருகில் தற்காலிக தூழியில் துவண்டு படுத்துக்கொண்டிருந்தது குழந்தை.

லாரிக்கு வாடகை போக மீதியிருந்த பணத்தை துண்டில் சுருட்டி கட்டிக்கொண்டு வியாபாரத்திற்கு தயாரானான். சூரியன் தாகம் எடுத்து குட்டைகளை குடிக்க தொடங்கியிருந்தது. கூட்டம் கூட தொடங்கியது அவன் கடைக்கு அருகே நிழலை பருக. அவ்வப்போது ஒன்றிரண்டு பேர் வந்து அவனை கடம் வாசிக்க செய்தார்கள்,ஆனால் கச்சேரி முடிவதற்குள் கிளம்பிவிடுவார்கள்.

      தினமும் கச்சேரி நடந்தது ஒன்றிரண்டு பார்வையாளர்களுக்காய். இடுப்பில் கட்டியிருந்த துண்டு கழுத்திற்கு வந்தது. பானைகள் படுத்திருந்தாலும் உண்டியல்கள் உருண்டதால் ஆமையாய் ஊர்ந்தது அவன் நாட்காட்டி.

சிறிது காலத்தில் உருண்டேடிய உண்டியலும் ஊமையாக. வித்துவானோ வேர் பிடித்த கால்களோடு விறகாய் நின்றான். எத்தனை பானைகள் இருந்தாலும் ஆக்கி தின்ன அரிசிக்கு அலயவேண்டி இருந்தது. அட்டையில்லா ஆட்களோடு அஞ்சு ரூபா அதிகம் அழுது கஞ்சன் போல ஆற்றிக்கொண்டான் அளவில்லா பசியை.
மலையாய் அடிக்கியவை எல்லாம் குன்றாய் குறையாமல், கூட்டமாய் குவிந்து கிடந்தது. நிழல் தேடி வந்தவர்கள் எல்லாம் கந்தனை நிற்க வைத்துவிட்டு போனார்கள். காலமும் ஓடியது கல்லறை தேடி. நேராய் நின்றவன், நிழலாய் படுத்துவிட்டான்.

படுத்திருந்தவன் சட்டென்று எழுந்து நின்றான். என்ன நினைத்தான் என்று தெரியவில்லை, அனைத்தையும் அனாதையாய் விட்டுவிட்டு  தன்னத்தனியாக நகர்ந்தான். மாநகரம் அவனை மண்டியிட வைத்திருந்தது. காலையில் நகர்ந்தவன் மாலையில் மறைந்து போயிருந்தான் கந்தன். தன் பணியைமுடித்து பதுங்குவதற்க்காக பாய்ந்துக் கொண்டிருந்தது சூரியன்.

 மந்தமான அந்திமாலை ஒளியில், தூரத்தில் மலையே நகர்ந்து வருவதுபோல இருந்தது கந்தன் மனைவிக்கு. அவனோ கழுதையாய் பொதியோடு வந்துக்கொண்டிருந்தான். பானைக்குவியலின் ஓரமாய் பத்திரமாய் படுக்கவைத்தான் பொதிமூட்டையை, படுத்திருந்த குழந்தை பரவசமாய் எழுந்து வந்து மூட்டையை பிரித்துபார்த்தது. வகைவகையாய், பல்வேறு அளவுகளில், அழகழகாக சிதறி வெளியேறியது " பிளாஸ்டிக் பாட்டில்கள்"...

    சிதைக்காமல் சில் சில்லாய் சிதறிப்போகின பழைய பானைகள்......

மேலும்

தந்திர நரி


                   ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று தனியாக தலை தெரிக்க ஓடுகிறது. எதற்காக தனியாக ஓட வேண்டும்? கொலை பசியின் காரணமாக மானை தொருத்துகிறது. சிங்கத்திடம் மாட்டிக்கொள்ளாமல் மான் எப்படியோ தன்னை காப்பாற்றிக் கொண்டது. சிங்கம் ஏமாற்றத்துடன் திரும்பியது. ஓடும்போது மானுக்கு பல இடங்களில் காயம் பட்டு ஒரு இடத்தில் விழுந்தது.         இதை பார்த்த நரி ஒன்று இதை எப்படியாவது உண்ண வேண்டும் என்று எண்ணியது. தன் தந்திரத்தால் மானிடம் சிறிது தொலைவில் இருந்து பேச்சு கொடுத்தது. மானை எப்படியாவது நம்ப வைத்து உண்ண வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் களமிறங்கியது.        
                                   தொலைவில் இருந்தே உடல்நிலை சரியில்லையா! என்று இதேபோன்று அன்பாக பேசிக்கொண்டே சிறிது சிறிதாக அருகில் சென்றது. மானும் உதவி தான் செய்கிறது என்று எண்ணி நம்பிவிட்டது.       
                           நரி மகிழ்ச்சியுடன் அருகில் சென்றது. மான் தனக்கு உதவி செய், என்னை தூக்கிவிடு என்று கூறும்போதே நரி அதன் தொண்டை பகுதியை கடித்து மான் இறந்து போனது. தன் பசியினை தீர்த்துக்கொண்டது நரி. அறவணைப்பது போல அன்பாக பேசி தன் எண்ணங்களை நிரவேற்றிக்கொண்டது.

 பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.

விளக்கம்: தீய குணமுடையவர் அன்பின் மிகுதியினால் விழுங்குபவர் போல் பார்த்தாலும் அவருடைய நட்பு வளர்வதை விடக் குறைவது நல்லது.              
                 என்பதை திருவள்ளுவர் கூறுகிறார். நல்ல நட்புடன் பழக வேண்டும் என்று கூறுகிறேன்.     

மேலும்

அணில் அணிச்சை செயல்     


                           ஒரு அடர்ந்த காடு. காடு பெரியது அல்ல. சிறிய காடு தான். அழகிய சூழல், பசுமையான மரங்கள், தேன் நிரம்பி வழியும் பூக்களுடன் காணப்பட்டது. சிறிது விலங்கு கூட்டம் தான் இக்காட்டில் வாழ்கின்றது. அந்த காட்டில் ஒரு விலங்கு மட்டும் அனைத்து விலங்கிடமும் கேலி செய்தும் வம்பு வளர்த்துக் கொண்டு இருந்தது. அது ஒரு அணில்.        நண்பர்களையும் சரி அக்காட்டில் உள்ள அனைத்தும் விலங்கிடமும் மனம் புன்படும் மாதிரி கேலி செய்தும், தீய சொற்களை கூறி மகிழ்ச்சி அடைந்து சிரிப்பது தான் அதன் வழக்கம். காட்டில் இதே போன்று எல்லாம் விலங்கிடமும் தீயசொற்களை பயன்படுத்தியாதால் அதில் ஒரு எலி மட்டும் அதிக அளவில் மனம் புண்பட்டு போனது. அணில் இதேபோன்று தினமும் பேசியாதல் ஆழ்மனம் உடைந்து ஆழ்கடலில் தற்கொலை செய்துக் கொள்ளும் அளவில் துன்புறுத்தியது.       ஒரு நாள் அணிலின் செயலுக்கு அளவில்லாமல் போனது. எலி அனைவரிடம் அசிங்கப்பட்டு நின்றது. எலி பார்த்து சிரித்தனர். மனமுடைந்த எலி தற்கொலை செய்துக்கொண்டது.       எலி இறந்தது தெரிந்தும் அணில் சாதரணமாக இருந்தது. இரண்டு நாட்கள் கழித்து அணிலிடம் ஒரு எலிக்குட்டி வந்து பேச்சுக்குடுத்தது. எலிக்குட்டி வழியாக சென்று அந்த அணிலிடம் மாட்டிக்கொண்டது என்று நினைக்கலாம் அதுதான் கிடையாது.        சிறிது பேசியது. அணிலிடமே பேசுகிறதா என்று அனைவரும் வேடிக்கை பார்த்தனர். வேடிக்கை மட்டும் தான் பார்ப்பார்கள் அவ்வளவு தான். எலியும் அணிலியும் மாற்றி பேசிக்கொண்டு இருந்தது. சுற்றி இருந்தவர்கள் கூர்ந்து கவனித்துக்கொண்டு சிரித்தனர்.     எலிக்குட்டி அனைவருமுன் அணிலை அதிக அளவில் அசிங்கபடுத்தியது. அணிலை அலர செய்தது. அனைவரும் அதை பார்த்து சிர்த்தனர். கூட்டத்தில் ஒட்டு துணி இல்லாமல் நிற்பது போன்று இருந்தது போல அவ்வளவு அசிங்கம். அசிங்கத்தில் அணிலுக்கு கண்ணீரே வந்தது.     எலிக்குட்டி விடவே இல்லை. தற்கொலை செய்யுமளவில் கேலியாக தான் பேசியது. தீய சொற்கள் சிறிதும் பயன்படுத்தவில்லை. நீ இதே போன்று தான் ஒருவருக்கு செய்தாய் அது என் அப்பா தான்.        எலிக்குட்டி அணிலை பழி திர்க்கவில்லை. அது செய்த தவறை திருத்தியது. மணித்துவிட்டது. சிறு பிள்ளையாக இருந்தாலும் நல்ல குணம் இருந்தது. அணில் தன் செய்த தவறை திருத்திக்கொண்டது. இதே போன்று தவறை இதுவும் செய்யாது மற்றவர்களையும் செய்ய விடவில்லை.

   துன்புறூஉந் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
 இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. 

 விளக்கம்:  அனைவருக்கும் இன்பத்தைக் கொடுக்கும் இனிய சொற்களைப் பேசுகிறவர்களிடம் , துன்பத்தைல் கொடுக்கும் வறுமை வந்து சேராது.                    
                        என்பதை திருவள்ளுவர் கூறுகிறார். இதிலிருந்து நான் உங்களுக்கு கூறுவது ’’’தீய சொற்களை பயன்படுத்தாமல் அனைவரிடமும் அன்பாக பேசுங்கள்’’’.
அளவில்லா அன்பை அளந்து காட்டிப்பார்
 இன்றும் என்றும் உன்னை போற்றும் இந்த உலகமே,,....       

மேலும்


மேலே