எண்ணம்
(Eluthu Ennam)
நண்பர்கள் எல்லோருக்கும் வணக்கம்:தமிழன் என்று எல்லோரும் மார்தட்டிக்கொண்டு திரிகிறோம்.... (ஆரோ)
17-Jan-2018 5:18 pm
நண்பர்கள் எல்லோருக்கும் வணக்கம்:
தமிழன் என்று எல்லோரும் மார்தட்டிக்கொண்டு திரிகிறோம். இது நமக்காக; நம்மை நாமே ஆய்ந்தறிந்து திருத்திக்கொள்வதற்காய்.... இந்த பதிவு;
தமிழன்- தமிழ்(மொழி) - தங்கிலீஷ்(பேசும் மொழி)
இது தான் நமது இன்றய நிலைமை. நம்மில் சிலர் ஆங்கிலம் தவிர்த்து பேசினால் அது தமிழாகிவிடும் என்றநினைப்பில் பேசிக்கொண்டிருக்கினறோம். அப்படியல்ல நாம் பொதுவாக பேசிக்கொண்டிருக்கும் பேச்சுவழக்கில் பெரும்பாலும் ஆங்கிலமும் வடமொழி சொற்களுமே. அவற்றை நீக்கி பார்த்தோமானால் தமிழ் 20 % கூட இல்லை எனவே தமிழை தெரிந்து பேசுவோம்.
ஏன் ? இந்த பதிவை படித்தபின்னும் சிலர் இதை கருத்தில் கொள்ள மறுக்கின்றனர். இந்த நிலையில் தான் நமது இன்றய தமிழ் பற்று இருக்கிறது. இப்படியே போனால் தமிழ் மெல்ல செத்ததாய் சொல்லமுடியாது. நாம் கொல்ல செத்ததாய் தான் சொல்ல வேண்டியிருக்கும். ஆம் இதே நிலை நீடித்தால் "தமிழ் நாம் கொன்றதால் தான் சாகும் "
இங்கிலீஸ் பேசுனாலும் தமிழனடா.... னு சொல்லிக்கிட்டு திரியாறோம்
இங்கிலீஸ் பேசுனா எப்படி தமிழனாவான்..........????
இதற்க்கு இருக்கேனும் விளக்கம் தெரிந்தால் சொல்லுங்களேன்.....
வட சொல் நீக்கி தமிழ் பேச நினைக்கும் நல்ல தமிழருக்காக....
Kandipaga vittu kuduka matten....tamil engirunthalum thedi thedi padipen.. 27-Jun-2018 4:05 pm
மிக்க மகிழ்ச்சி, உங்களின் தமிழ் பற்று மிகவும் போற்றுதலுக்குரியது. எந்த நிலையிலும் உங்களின் தாய் மொழி பற்றை விட்டுக்கொடுக்காதிர்கள்.
உங்களின் கருத்திற்கு தலை தாழ்ந்து வணங்குகிறேன். 27-Jun-2018 12:08 pm
மிகவும் சிறந்த பதிவு.. நான் பெங்களூருவில் பனி புரிகிறேன் ...எங்கள் ஆஃபீஸ்ல் ஆங்கிலம், கன்னடம் தன நிறய பேசுவார்கள்... தமிழ் நான் ..ஒரு சிலர் இருக்கின்றனர் . ஆனால் அவர்கள் ஆங்கிலம் தான் பேசுவார்கள்..என்னிடம் பேசினால் கூட ..ஆனால் நான் திருப்பி தமிழ் தான் பேசுவேன் பிறகு அவர்களே தமிழ் பேசுவார்கள்.. நான் எப்போதும் என் தாய் மொழியை விட்டு கொடுக்கமாட்டேன்.. 27-Jun-2018 11:39 am
மிகவும் நண்றிகலந்த வணக்கங்கள். 28-Feb-2018 2:20 pm