எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

  'அ'

இன்னிசை வெண்பா.....17
தன்னல மில்லாது தன்மானம் பாராது
தன்னார்வங் கொண்டுதொண்டு செய்வது கண்டார்ந்து
தன்னிலை தாழ்ந்து தழுவ இறையுரு
பொன்வானம் நீட்டும் கரம்.  

மேலும்

எழுத்து தள நிர்வாகிக்கு நன்றியும் பாராட்டுக்களும் உரித்தாகுக..


எண்ணற்ற தலைப்பில் எழுத்து தளம் படைப்புகளை வழங்கி வருகிறது, ஆனால் மிகமுக்கியமான தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் "வெண்பா" என்ற தலைப்பை உங்கள் தளத்தில் சேர்க்கவும். வெண்பாவை விரும்பிப் படிப்பவர்கள், எழுத முயற்சி செய்பவர்களுக்கும் உதவியாக இருக்கும்..

நன்றி அன்புடன் பெருவை பார்த்தசாரதி

மேலும்

சுஜாதா வெண்பாக்கள்

லஸ் கார்னர் பிளாட்ஃபாரக் கடைல பழைய கணையாழி இஷ்யூ ஒண்ணு பார்த்தேன்.  சுஜாதா அதுல ஒரு வெண்பா எழுதி இருக்கார்.
விண் நெடுகப் பரவி, பாரிஸ் வனிதையர் போல்  கண்ணடிக்கும் தாரகை யெல்லாம் எண்ணி வைத்த  முட்டாள் ஒருவர் இருக்கார்; அவர் நமக்கு  எட்டாத கடவுளப்பா!
சங்க கால, தங்க காலத்துக்காரங்கதான் வெண்பா, என்பா, உன்பாவெல்லாம் எழுதணுமா என்ன ? இப்படி லேசான ஹ்யூமரை சுருக்கமாக வெளிப்படுத்த வெண்பா ஸ்டைல் ரொம்பப் பொருத்தமா இருக்கும்னு பட்டுது.  சின்னதா நானும் ஒண்ணு ட்ரை பண்ணிப் பார்த்தேன்.  (இலக்கணமெல்லாம் பார்க்காதீங்க

மசாலா தோசையென்றும் மாம்பழத்து ஜூஸ் என்றும் குஷாலாயிருக்குமென்று குல்ஃபியும் — மஜாவா  ஸாட்டர்டே சாயங்காலம் சக்கைப்போடு போட்டதனால்  ‘வாட்டரா’கப் போச்சே பணம்!

மேலும்

இலக்கணம் அறியாமல் வெண்பா எழுதுதல் குற்றமாம்..

வெண்பா நிறைய எழுத வேண்டும்!... என்பது ஆசை!

அதன் சூட்சுமம் ஓரளவிற்கு அறிந்துள்ளேன்!..என்பது வருத்தம்!


வெண்பா ஒர் கனவு..!


தலைக்கன மில்லாமல் எழுத நினைத்து

இலக்கணம் அறியாது எதையோ எழுதி - அது

பண்பா விருக்குமா வெனப் பார்த்தாலெனக்கு

வெண்பாவென்ப தோர்க் கனவு..!      

மேலும்

வெண்பாவியற்றுவது "முடியும்" என்கிற நம்பிக்கைச் செடிக்கு, அனைவரின் உதவி என்கிற தண்ணீரால் தளிர் விட முடியும் என நினைக்கிறேன். அனைவருக்கும் நன்றி 26-Apr-2017 10:07 am
கற்/க/ கச/ட ற / கற் /பவை/ கற்/றபின் நேர் நேர் /// நிரை நிரை// நேர் நிரை//// நேர் நிரை தேமா ---------கருவிளம்-----------கூவிளம் ----------கூவிளம் நிற்க அதற்குத் தக நேர்நேர்// நிரை நேர்//// நிரை தேமா ------புளிமா ---------- (பிறப்பு என்ற வாய்ப்பாடு போல் ) மா முன் நிரை விளம் முன் நேர் ஈற்றுச் சீர் ஓரசைச் சீர். தளை தட்டவில்லை . வள்ளுவர் குறட்பா தளை தட்டுமா ? குறள் ஈரடி வெண்பா முதலில் குறில் நெடில் படி அசை அமைக்கவும் . அசை வழி சீர் அமைக்கவும் . எனது வெண்பா எழுதுவோம் பத்திவைப் பார்க்கவும் . ஐயம் இருந்தால் தனி விடுகையில் கேட்கவும் . நான் ஆசான் எல்லாம் இல்லை. வெண்பா நண்பன் என்கிற முறையில் நான் அறிந்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் . ஷ்யாமளா ராஜசேகர் வெண்பா புனைவதில் வித்தகர் . அது போல் கவி நண்பர்கள் யாப்பெழிலார் எசேக்கியேல் . டாக்டர் வி கே கன்னியப்பன் இங்கே யாப்பு வழிக் கவிதைகள் நிறைய பதிவு செய்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள் அன்புடன்,கவின் சாரலன் 25-Apr-2017 7:56 pm
அனேகமாக முதல் முயற்சியில் முன்னேற்றம் இருப்பது தெரிய வருகிறது... இப்போதைக்கு அலகு பிரிப்பதை இன்னும் சற்று அலச வேண்டும் என நினைக்கிறேன். ஆசான் அய்யாவுக்கு நன்றி... 25-Apr-2017 6:31 pm
இதையே என் முதல் முயற்சியாக வைத்து எழுத முயல்கிறேன்... அடுத்த பாவில் கொஞ்சம் முன்னேற்றம் இருக்கும்...பதிலுக்கு... நன்றி அம்மா... 25-Apr-2017 6:28 pm

நேரிசை வெண்பா எழுத முயற்சி செய்தேன். இழோ அந்த வெண்பாக்கள். பிழைகள் இருந்தால் தவறாது கூறுங்கள்.


நிலவுகளின் வதனத்தில் அமிழ்தெளித் தழிப்பவன்
நீலக்குயிலின் உரிமைக்குர லறுத்தவன் - மலர்களின்
சூல்பறித்த மனிதம் அற்றவன் மழலையில்
எல்லோரும் நல்லவரே ஈண்டு......



வல்லினத்தில் வசைப்பாடி நெஞ்சம் துவைப்பார்
மெல்லினத்தில் புகழ்பாடி வதைப்பார் - சொல்லிலே
வேல்முனை வைத்தே துளைப்பார் வஞ்சகத்தில்
எல்லோரும் நல்லோரே ஈண்டு......

மேலும்


மேலே