எண்ணம்
(Eluthu Ennam)
பிரபல திரைப்படப் பாடலாசிரியர் திரு நா. முத்துக்குமார் அவர்கள் மரணம் அடைந்தது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு. அதிர்ச்சி அடைந்தேன். வலைதளம் மூலமாக அறிந்தது மிகவும் வேதனை அடைந்தேன் .
அவர்தம் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
பழனி குமார்
பழனிக்கு குமார் குடும்பத்துக்கு எழுத்து தள குடும்பத்தினர் அனைவரும் ஆறுதல் கூறுவோம்
நம் குடும்ப நண்பர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்
கண்ணீர் அஞ்சலி பிரார்த்தனை செய்தோம் . 16-Aug-2016 5:09 am
அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த இளம் வயதில் தேசிய விருதை தமிழுக்கு வாங்கித் தந்த இந்த இளம் கவிஞர் இப்போது இல்லை என்பதை கேட்டு மனம் கலங்குகிறேன். ஆனந்த யாழாய் அவர் என்றும் தமிழோடு இணைந்திருக்கட்டும். 14-Aug-2016 12:36 pm
எழுத்து தளத்தின் மூலமாக எனக்கு அறிமுகமான நண்பர் , மரபுக் கவிஞர் திருமதி சியாமளா ராஜசேகரன் அவர்களின் மூத்த மகன் திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி இன்று மாலை கவிஞர் திருமதி சகானா தாஸ் மூலமாக அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
நான் ஒரு முறை அவர்கள் இல்லம் சென்ற போது அவர் எங்கள் குடும்பத்தினரை வரவேற்று உபசரித்த காட்சி இன்னும் எனது மனதில் ஓடி கொண்டிருக்கிறது. பசுமையாக நினைவில் உள்ளது .
சிரித்த முகமுடன் எங்களுடன் பேசிக் கொண்டிருந்த காட்சி மறக்கவே முடியாது.
அவர்களுக்கு இது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் .
திருமதி சியாமளா ராஜசேகரன் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது சார்பாகவும் எங்கள் குடும்பத்தினரின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலையும் , அனுதாபங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்
.
ஈடு செய்ய முடியாத இழப்பு. மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு.
காலம் ஒன்றுதான் அவர்களுக்கு மருந்தாக இருக்கும்.
ஆறுதல் கூறிட வார்த்தைகள் இல்லை.
பழனி குமார்
ஆழ்ந்த அனுதாபங்கள் 21-Jul-2016 1:47 pm
மிகவும் அதிர்ச்சியான செய்தி... அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயா... ஈடு செய்ய முடியாத இழப்பு..... 21-Jul-2016 7:27 am