எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முருகன் என்பதற்கு அழகு என்று பொருள்.

👍👌👍👌👍👌👍👌👍👌👍👌👍👌👍
முருகனை மட்டுமே தமிழ்க் கடவுள் என்பர் ஆன்றோரும் சான்றோரும்!
👍👌👍👌👍👌👍👌👍👌👍👌👍👌👍
@@@@@@@@@

முருகன் என்றால் அழகு என்று பொருள்படும் என்று கூறுகிறார் தமிழறிஞர் திரு.வி கூறுகிறார் ஒரு கட்டுரையில்.   1970-72ல் இளங்கலை பட்ட வகுப்பு   மிழ் மொழிப் பாடத்தில் நான் படித்த கட்டுரை அது. 

முருகனை கார்த்திகேயா, ஸ்கந்தா என்பர் வடமொழியில். ஆனால் வட இந்திய மக்களுக்கு முருகப் பெருமானைப் பற்றி ஒன்றும் தெரியாது.  இந்து மதத்தில் உள்ள  பிற கடவுள்களின் பெயர்களில் ஒன்றுகூட    தமிழ்ப் பெயராக 
இல்லை என்பதை யாராலும் 
மறுக்கமுடியாது.

 இன்று கந்த சஷ்டி சூரசம்ஹாரம் பற்றி தொலைக் காட்சியிலும் ஒளிபரப்பானது. ஸ்கந்தா என்பது கந்தன் ஆனது. ஆனால் சஷ்டி சம்ஹாரம் போன்றவை தமிழ்ச் சொற்கள் அல்ல.  இந்தச் சொற்களை சிறுவயது முதலே அறிந்துள்ளேன். அதில் சம்ஹாரம் என்ற சொல்லின் பொருளை கடந்த சட்ட மன்றத் தேர்தலின் போதுதான் தெரிந்து கொண்டேன்.  அழிப்பது என்று அதற்கு பொருள். 

ஒரு அரசியல்வாதி  தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சத்ரு சம்ஹார யாகம் நடத்தியதாக நாளிதழ்களில்  செய்தி வெளியானது. 

இன்னும் சஷ்டி என்ற சொல்லின் பொருள் தெரியவில்லை. நாளை கூகுலில் தேடிப்பார்க்கிறேன். 

மேலும்

மனிதர்களின் பண்புகளையும் செயல்களையும் மனிதர்கள் படைத்த கடவுளர்க்கும் கொடுத்தவிட்டனர். நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர் சுப்ரமணியம் சந்திரசேகரிடம் "அய்யா மனிதர்களின் கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு எது என்று கேட்டபோது அவர் அளித்த பதில் "கடவுள்". 16-Nov-2016 11:04 am
முக்கியமான சொற்கள் -----இன்றியமையாச் சொற்கள் என்று செம்மொழி வழியில் சொல்லலாம் அன்புடன்,கவின் சாரலன் . 16-Nov-2016 10:57 am
தென்புலத்தார் பற்றிய கடமையை வள்ளுவரும் வலியுறுத்துகிறார் . தேர்ந்தோரிடம் கேட்கவும் . அன்புடன், கவின் சாரலன் 16-Nov-2016 10:54 am
"இன்னும் சஷ்டி என்ற சொல்லின் பொருள் தெரியவில்லை." ---இதன் விளக்கமாகத் தான் எனக்குத் தெரிந்த தகல்வல்களைத் தந்திருக்கிறேன். மறை வழி இறைவழிபாடு செய்வோர் ஆலயங்களில் வெகுவாக பயன்படுத்தும் வட மொழிச் சொற்கள் என்பது உண்மை . வடமொழியில் பிரதம் பிரதமை த்விதியை என்பாதெல்லாம் தமிழில் ஒன்று இரண்டு ஆங்கிலத்தில் one two என்பது போல் எண்ணிக்கைகளே. செம்மொழி வழியில் இதை சொல்ல வேண்டுமானால் இவைகள் எண்ணிக்கை என்பதால் இப்படி எழுதலாம் . பிரதமை ௧ ---முதலாம் பிறை , த்விதியை ௨ ---இரண்டாம் பிறை , திருதியை ௩ ---மூன்றாம் பிறை .....அப்படியே மற்றவைகள் . பௌர்ணமி ----முழு ஒளி நிலா நாள் அமாவாசை ---இருள் பிறை நாள் . ஆறாம் பிறை அழகா முருகா நாலாம் பிறை அண்ணன் கணேசனுக்கு எட்டாம் பிறை கண்ணனுக்கு ஒன்பதாம் பிறை ராமனுக்கு ! அன்புடன், கவின் சாரலன் 16-Nov-2016 10:09 am

மேலே