தீயும் குளிரும்....

காயும் கனியும் - உன்
கைவிரல் மெல்லத் தொட்டால்;
தீயும் குளிரும் - உன்
தேனகைத் தூற்றல் பட்டால்!

கல்லும் உருகும் - உன்
கள்ளிசை பருக லுற்றால்;
புல்லும் மணக்கும் - உன்
பூவடி பொருந்தப் பெற்றால்!


கவிஞர் : மீரா (கவிஞர்)(9-Mar-12, 6:36 pm)
பார்வை : 35


மேலே