தன் முனைப்பு

எந்தக் கிளையில் வந்தமர்ந்தாலும்

அந்தக் கிளையை முறிக்கும் அப்பறவை

அக்கிளையிருந்து பதறியெழும் குருவிகளை

அம்பினால் தைத்து இன்புறும்

வேட்கை ஆறும்

சூரியக் கூச்சமும் சுடுதென்று ஒளியும்

இருண்ட யோனியின் அடர்ந்த பசுங்காட்டை

மதயானை மிதித்தேகவிட்டு

சிந்தனைக் கரு விளையும்

எமது செந்நிலத்தை அடகுப்பாத்திரமாக்கும்

மரம் போலும் அசையாதிருக்கும்

அக்கிளையில் அழகாய்ச் சிறகசைத்து

வந்தமரும் மீண்டும் ஒரு குருவி


கவிஞர் : குட்டி ரேவதி(2-May-14, 7:16 pm)
பார்வை : 0


மேலே