தைமகளே வருக பொங்கல் கவிதை போட்டி

வண்ணமாய் துள்ளி கொண்டு
பல மாதங்கள் கடந்து வருபவளே !
பூவைத்து பொட்டிட்ட பெண்டிற்
வரவேற்கும் தை மகளே !

களஞ்சியம் நிறைந்த கிடங்குகளில்
சரிந்து கிடக்கும் நெற்பயிர்கள்
அறுவடை செய்து வந்தவனை
தூக்கி சுமக்க வந்தவளே !

செழிப்பின் உயர்வில் நிற்பவளே !
அறுப்பின் பயிர்போல் செழித்தவளே!
காலம் தந்த தேவதையே
உழவன் பெற்ற மகளே !

பழமை எரித்து புதிதாய் வந்தவளே !
மண்ணுக்கு முத்தமிட மார்கழி தாண்டியவளே !
உன் நிழல் கூட புனிதமே .!
உன் நிறம் கூட பசுமையே .!

திருவிழா பூண்ட தமிழ் மகளே !
உழவன் வீட்டின் மாகோலமே
உன் பிஞ்சு பாதங்கள் பதிந்தே
வறண்ட மண்ணே செம்மண் ஆனதுவே !

உன் வருகைக்காக காத்திருந்தோம்
மகிழ்ச்சி பொங்க பார்த்திருந்தோம்
இனிப்பு செய்து வேர்த்திருந்தோம்
விடியலை பார்த்து நீ வருக !

எழுதியவர் : ஷெரில் (7-Jan-13, 1:26 pm)
பார்வை : 185

மேலே