உழவின்றி உலகில்லை (பொங்கல் கவிதை போட்டி )

மண்புழு முதல் மனிதன் வரைவாழவைக்கும் உழவே
நீ உணவு மட்டும் தரவில்லை உணர்வும் தருகிறாய்
ஆசியாவின் அரிசியிலும் அமெரிக்காவின் கோதுமையிலும்
இருப்பதுஅந்த நாட்டின் உணவு மட்டுமல்ல
அந்த நாடுகளின் உணர்வும் என்பதை மறந்து விடாதீர் ..

உணவு முறையை மாற்றும் மனிதா
உன் உணர்வையும் மாற்றுகிறாய் என்பதை மறந்துவிடாதே ...
இப்படி சொன்னால் ..?பித்தன் ஒருவன் பிசத்துகிறான் என்கிறார்கள்
அடித்து சொல்லுகிறேன் உழவை இழந்தால் உணர்வை இழக்கிறாய் ...!

உழவு எந்தநாட்டில் நலிகிறதோ ..அந்த நாட்டின்
பண்பாடும்கலாச்சாரமும் நலிகிறது......மனிதா
உழவை உணர்வோம் எம் பண்பாட்டை மதிப்போம் .
உழவு உணவையும் உணர்வையும் தருகிறதே
உழவு இன்றி உலகிருக்க முடியுமா..?

எழுதியவர் : கவிஞர் இனியவன் (7-Jan-13, 8:59 pm)
பார்வை : 94

மேலே