கொஞ்சம் புதிதாய்...
சந்திரன்....
பூமிக்கு துணைக் கோளாம்.
சுற்றி வருகிறது.
என் ஜாதகத்திலும்..
பனிரண்டு கட்டங்களில்...
ஏழாம் இடத்தில் பதுங்கியபடி...
சுற்றி வருகிறது
இந்தச் சந்திரன்....
வேறொரு கட்டத்தில் அமர்ந்திருக்கும்...
இராகுவுக்கும், கேதுவுக்கும்...
தப்பிப் பிழைத்தபடி.
********************************************************************
சூரியன்...
ஏழு குதிரைகள் பூட்டிய தேரில்..
சுற்றிவருகிறானாம் தினமும்.
வானவில்லின் ஏழு நிறங்களாய்...
நிறப்பிரிகையின் ஏழு நிறங்களாய்...
இருக்கலாம் இந்தக் குதிரைகள்.
அந்தியில் களைத்து...
மலை சரியும் சூரியனிடம்
விடைபெற்று...
லாயம் அடையும் குதிரைகள்...
ஏனோ சுமந்து திரிவதில்லை...
என் கவிதை சுமந்து வரும்
வெண்ணிலவை.
**********************************************************