பெண்களே கொலை செய்யுங்கள்....ஆந்திர போலீஸ் டி ஜி.பி..! வன்கொடுமைக்கு தீர்ப்பா..?!

பெண்களே கொலை செய்யுங்கள்....ஆந்திர போலீஸ் டி ஜி.பி..! வன்கொடுமைக்கு தீர்ப்பா..?!

ஐதராபாத் மாதாபூர் பகுதியில் உள்ள ஐ.டி. பார்க்கில் நடந்த நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஆந்திர மாநில டி.ஜி.பி. தினேஷ் ரெட்டி கலந்து கொண்டு இவ்வாறு ஒரு அரிய கருத்தை செப்பினார்.

இவ்வாறு கேட்டனர் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் டி ஜி.பி.யிடம்.,

ஆண்களின் பாலியல் வன்கொடுமையில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள என்ன செய்ய வேண்டும்..? என்று பெண்கள் கேட்டதற்கு தான் இந்த பதிலை சொல்லியுள்ளார் ஜி.ஜி.பி. பாலியல் செய்யும் ஆண்களிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள அவர்களை கொலை செய்ய தயங்க கூடாது. கொலை ஒரு குற்றமாக இருந்தாலும் எந்த பின்னணியில் கொலை நடந்தது என்பதை ஆராய்ந்து தான் போலீசார் வழக்குப் பதிவு செய்வார்கள் என்று செப்பியுள்ளார். திரு தினேஷ் ரெட்டி.

ஆகா...என்ன ஒரு பதில் என்று மெய்சிலிர்க்க தான் செய்கிறது. கற்பழிப்பு நடப்பதற்கு முன் அந்த நபர் கொலை செய்யப்படுகிறார் அல்லது வன்கொடுமை நடந்த பிறகு அந்த நபர் கொலை செய்யப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதன் பிறகு என்ன நடக்கும்..?

உங்களை எவ்வாறு கற்பழிப்பு செய்ய முற்பட்டார்கள்..? எத்துனை நபர்கள்..? முதலாம் நபர் என்ன செய்து முயற்சி செய்தார். இரண்டாம் நபர் என்ன செய்தார். ஆறாம் நபர் அப்பொழுது எந்த திசையில் நின்று கொண்டிருந்தார் என்று ஒரு ஐந்து வருடங்களுக்குப் பிறகு கேள்விகளை கேட்பார்கள்,அல்லது ஒரு வருடம் கழித்து கேட்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம்.
அதுவரை அந்த சம்பவங்களை கோர்வையாக மனப்பாடம் செய்து வைக்க வேண்டுமா..?

சரி...வன்கொடுமைக்கு பிறகு அந்த நபர் கொல்லப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். மேற்கண்ட கேள்விகளுடன் கூடுதலாக என்னன்ன கேள்விகள் கேட்பார்கள் என்பதை நாம் எழுதிதான் புரிந்து கொள்ள வேண்டும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. வன்கொடுமை அதன் இலவச இணைப்பாக கொலைப்பட்டமும்..? எப்படி ஒரு ஐடியா பாருங்கள்.

போலீஸ்காரர்களிடம் இருந்து தப்பித்து, வழக்கில் இருந்து தப்பித்து, பிறகு வேலை வெட்டி என்று பிறகு திருமண வாழ்க்கை இவையெல்லாம் பணம் வைத்திருப்பவர்களாலேயே முடியாத காரியம்.

சாதாரண நடுத்தர வர்க்க பெண்கள் என்ன செய்வார்கள்..? ஒரு கார் புதிதாக விற்பனைக்கு வருகிறது. டூ பீஸ் உடையில் ஒரு அழகிய பெண்ணை வைத்து அறிமுகம் செய்து கொண்டிருக்கும் காலத்தில், கொலை செய்யுங்கள் என்றால் என்ன அர்த்தம்..?
உலகமயமாக்கலின் பௌதீக மாற்றமே சுதந்திரமான செக்ஸ் என்றும், பெண்கள் சக மனிதர்கள் அல்ல என்றும் அவர்கள் ஒரு நுகர்வுப் பொருள் என்றும், திரும்பிய பக்கம் எல்லாம் ஒரு இருபது வருடங்களாக இழிவுபடுத்தி விட்டு, தற்பொழுது கொலை செய்யுங்கள் என்றால் என்ன அர்த்தம்.

வன்கொடுமை உலகெங்கிலும் முன்பை விட கடந்த இருபது வருடங்களாக மிக மிக அதிகரித்துள்ளன என்றால் உங்களால் நம்ப முடியுமா..? பெண் விடுதலை, பெண் சுதந்திரம் இந்த உலகமயமாக்கல் காலத்தில் சாத்தியமே இல்லை..! பிறகு என்ன தான் தீர்வு. ?

நல்ல சமூக சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள் தான் சொல்ல வேண்டும் பெண் விடுதலைக்கு என்ன தீர்வு..? என்று.

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (8-Jan-13, 5:18 pm)
பார்வை : 149

மேலே