இது எப்படி இருக்கு...?
எவருக்குத் தான் எதிரி இல்லை.
அது போல
எனக்கும் இருக்கத்தான் செய்தது!
மூளையுள்ள எதிரி,
மூளையில்லா எதிரி என இருக்கையிலே
என்னோடு மோத வந்த எதிரிக்கு
மூளையில்லையென
மக்கள் தெரிவிக்கையில் அறியமுடிந்தது!
என்னைக் கொல்ல இருந்த எதிரியை
மக்கள் அடையாளப்படுத்தியதால்
தப்பித்துக் கொள்ளமுடியாத எதிரி
என்மீது
எண்ணற்ற பொய்க் குற்றங்களைக் கூறி
மக்களிடமிருந்து
என்னைத் தனிமைப்படுத்த முயன்ற போது
நாணயத்தின் மறுபக்கத்தை பார்ப்பது போல
என் நல்ல பக்கத்தைப் படித்ததால்
மீள மீள மக்கள் என்னை விரும்ப
ஈற்றில் எதிரியே தற்கொலை செய்துவிட்டார்!
என்னைக் கொல்ல இருந்த எதிரி
தன்னைத் தானே
தற்கொலை செய்து சாவடைந்தாலும்
காவற்றுறையோ
உள(மன) நோயால் தற்கொலை செய்துவிட்டதாக
தீர்ப்புக் கூறியதை
செய்தித் தாளில் படித்த மக்கள்
ஆளுக்காள் ஆயிரம் சொல்லப் படித்தேன்!
தாங்கள் கொல்ல இருந்த ஆள்
நானில்லை என்று
காட்ட வந்தது பிழையாம்...
மக்களிடமிருந்து
என்னைத் தனிமைப்படுத்தியது பிழையாம்...
தாங்கள் தான்
என்னைக் கொல்ல இருந்ததாக
நான் தெரிவிப்பதை
மக்கள் நம்பிவிடக்கூடாது என்பதற்காக
எனக்கு விசர்(Maniac) என்று
ஒதுக்கி வைக்க முனைந்தது பிழையாம்...
மக்களிடமிருந்து
என்னைத் தனிமைப்படுத்தினால்
தாங்கள் இணையலாம் என்றும்
தாங்கள் இணைந்தால்
செவ்விளநீ்ர் வெட்டும் கத்தியாலே
என் தலையை அறுக்கலாம் என்றும்
நான் சாவடைந்தால்
விசர்(Maniac) இல சாவடைந்தது என்றோ
தாங்கள் கொலையாளிகள் இல்லையென்றோ
மக்களை நம்பவைக்கலாம் என
எண்ணியது பிழையாம்...
மொத்தத்தில
தங்கட பிழைகளை மறைக்க
என் மீது பிழைகளைச் சுமத்தி
தாங்கள் தப்பலாம் என
எண்ணியது பிழையாம்...
இன்னும் எத்தனையோ இருக்க
என்னால தொடர முடியவில்லை...
உண்மையில்
எனக்கும் தங்களுக்கும்
உறவிருப்பதாகக் காட்டிக்கொள்ள
எதிரியோ
எனது உடைமைகளை களவெடுத்துச் செல்ல
நானோ
மக்களிடம் பிச்சை எடுத்து
என் பிழைப்பை நடாத்த
உண்மைகள் வெளிப்பட
மக்களுக்குப் பதில் கூற முடியாத எதிரி
தங்கள் பிழைகளை மறைக்கவும் இயலாமல்
மக்களுக்கு
தாங்கள் நல்லவரென நடிக்கவும் இயலாமல்
ஈற்றில் எதிரி
தன்னைத் தானே தற்கொலை செய்தாக
மக்கள் தீர்ப்புக் கூறுகின்றதே!
ஆண்டாண்டு காலமாக
சிங்கள இனவாதிகளின் செயற்பாடு
இப்படித்தான் இருக்க
தமிழனாகிய
என்னைக் கொல்ல இருந்த
சிங்கள எதிரிகள்
என்னைக் கொல்ல இயலாமலே
தாங்கள் தற்கொலை செய்ததை மறைக்க
சிங்களத் தன்மதிப்பைப் பேண
சிங்களக் காவற்றுறை
உள(மன) நோயால் தற்கொலை செய்தாக
சாட்டுகள் முன் வைத்திருக்கலாம் என
பேசப்படுவதில் உண்மை இருக்க
வாய்ப்புகள் நிறையவே இருக்கிறதே!
உண்மையாகவே
உண்மையை சொன்னால்
தமிழர்
ஐக்கிய இலங்கைக்குள் வாழ விருப்பம்
எப்பவும்
கடந்த காலச் சிங்கள
இனவாதிகளின் செயற்பாடே
இந்தியாவில் தமிழ்நாடு போல
இலங்கையில்
தமிழீழம் எனப் பிரிந்து வாழ
எண்ணுகிறார்கள் என
உலகமே சொல்வதில் தப்பில்லையென
புத்தர் பெருமான் சொன்னதாக
பௌத்த வரலாற்று நூல்களில் இருப்பதாக
தகவல் கசிந்திருக்கிறதாம்...
என்னால்
உண்மையை உறுதிப்படுத்த முடியாமைக்கு
மன்னிப்புப் கேட்டுக் கொள்கிறேன்!
(இது கவிதையா? கட்டுரையா? கதையா? உங்கள் விருப்புக்கு ஏற்ப ஏற்றுக்கொள்ளவும்.)
tag-இலங்கைத் தமிழ்-சிங்கள உறவுப்பாலச் செய்தி