உயிர் விளையாட்டு

கொண்ட
உடலும் ஆன்மாவும்,
கட்டி இருக்க உதவிய
என் மனம்,

உன் உயிர் ஒட்டிய
ஒட்டுத்தன்மையால்
நிரம்பி நிற்கிறது
கசிய முடியாக் காதலில்.

கட்டு தளர்ந்த உடல்.

சதை பிரிந்து
ஊற்றிய காதலில்
கரைந்து கலந்து ஆன்மா.

உயிர் விளையாட்டு
உலக விளிம்பில்.

எழுதியவர் : jujuma (2-Nov-10, 1:44 pm)
சேர்த்தது : nellaiyappan
Tanglish : uyir vilaiyaattu
பார்வை : 1341

மேலே