........இயந்திரமல்ல இயக்கம்.........

இயந்திரங்களின் பயன்பாடு,
மனிதனின் வேலைப்பளுவை,
வெகுவாய் குறைக்க இதில் மகிழ்ந்து,
மனம் லயித்து சுகவாசியகிறவன்,
வேலையற்ற வலுவில்லா உடலின் உரிமையாளன்,
உடல் சோர்ந்து உள்ளமும் தூர்ந்து,
பழுதடையும் பொருளாகும் தகையாகிறவன்,
எதைசெய்து என்னமாற்றம் கொனருவான்,
இயலாத இல்லாத முடியாத மடியாத,
போராடும் போர்க்குணங்கொண்டவர் எண்ணிலர் நமில்,
எண்ணித்துணிக கருமம் இவர்காக்க எவருண்டு நமையன்றி,
பெற்ற உடல் உழைப்பில் ஆழ்த்தி மற்றவரை மகிழ்வியேன் நீ !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (10-Jan-13, 8:37 pm)
பார்வை : 89

மேலே