மீள் பதிவு -- சாம்பல் காடு பகுதி 1

இங்கு வாசிக்க வந்த என் அன்பார்ந்த நெஞ்சங்களுக்கு என் நெஞ்சுருகும் ஒரு வேண்டுகோள்.
தயவு கூர்ந்து பொறுமை காத்து, இந்த தொடரின் வாசிக்கும் தங்களின் கருணையை இறுதிவரையில் தொடர்ந்து செல்வதில் காட்டவும்.
இது மனித குலத்தில் பிறப்பெடுத்த நம் அனைவரின் மனிதக் கடமையாகும் என்பதை கண்ணீர் மல்க வேண்டிக் கொள்கிறேன்.

படித்தாலே
வீரம் சொட்டுகிற
நெஞ்சில் ஈரம்
சொட்டுகிற
வரலாற்றுப் பக்கங்கள் இது.
எழுதிய பக்கமே கூட
எரிந்து விடுமளவுக்கு
சுதந்திர இந்தியாவின்
சூடானப் பக்கங்கள்.

நாற்பத்தி நான்கு
மனித உயிர்களை
விறகாக எடுத்துவைத்து
அந்த நெருப்பிலே
கொடியவனொருவன்
தனக்கானத் தேநீரைத்
தயாரித்துக் கொண்ட வரலாறு.

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த
அந்த இரண்டாம் நூற்றாண்டு
மனிதனின் பெயர்
கோபாலகிருஷ்ண நாயுடு.
அன்றொருநாள்
பண்ணையார்கள்
தங்கள் கோரப்பற்களைக்காட்டிச்
சிரித்தார்கள்.

அவர்கள் அகராதியில்
சிரித்தார்கள் என்றால்
ஏழைகள் உயிரை
எரித்தார்கள் என்று பொருள்.
*****

ஒரு காட்டுமிராண்டிக்கூட்டம்
அந்தக் கிராமத்தில் நுழைந்து
அங்கே
மனிதகுலம் வாழ்ந்ததற்கான
அத்துணைச்சுவடுகளையும்
அழித்துவிட்டுப் போனது
*****

பெண்கள்
குழந்தைகளென
நாற்பத்தி நான்கு மனித உயிர்களை
உயிரோடு தீயிட்டுக்கொளுத்திய
வரலாறு காணாத
அந்த கோரமான காட்டுமிராண்டித்தனம்
அரங்கேறிய தினம்
1968 டிசம்பர் 24.

நமது பாவங்களைக் கழுவ
இயேசு கிறிஸ்து
இந்த பூமியில் அவதரித்த
அதே புண்ணிய தினத்திற்கு
முதல் நாள்தான்
இந்த பாவச்செயலும் அரங்கேறியது.


படைத்தவர்: சுந்தரபாண்டியன் (திருப்பூர்)
நாள்: 29-12-2012: நேரம்: 09:15:58
பார்வை: 43 ( 11-01-13 ன் படி)

தொடரும்......



இது கருணை யாசகம் கேட்கும் நோக்கில் படைக்கப்பட்ட படைப்பு அல்ல. உணர்வுகளை எழுதி காசாக்கும் வியாபார நோக்கான மீள் பதிவும் அல்ல. மனிதகுலம் மனிதத்தில் தழைக்க வேண்டும்.
இனியாவது நாம் உயிர்த்தியாகங்களை பார்வையாளராக நோக்காதிருக்கும் சிந்தனை பெறுவது அவசியம் என்பதை எல்லோரும் உணரும் தருணத்திற்காக ஏங்கும் நினைவில் வந்த படைப்பும் மீள்பதிவும்.

எழுதியவர் : சுந்தரபாண்டி (திருப்பூர்) (11-Jan-13, 11:36 am)
பார்வை : 112

மேலே