தலை தொங்கியது.

மாலை வேளையில் மங்கும் ஒளியில்
மாங்கனி அவளும் மாருதி அவனும்
மையலில் இருந்தனர் அருகருகே
தையல் அவள் திடீரெனக் கேட்டாள்
புகை பிடிக்கும் வழக்கம் உண்டா?
அதுதான் என்னைப் பிடித்து உள்ளது
எத்தனை பிடிப்பீர் நாள் ஒன்றில்
மொத்தமாய் முப்ப தெனச் சொன்னான்
எத்தனை ஆண்டுப் பழக்கம் அது
பத்தே பத்து ஆண்டுகள் தான்
ஒன்றின் விலை மூன்று ரூபாயா
அன்று ஆறு என்று திருத்தினான்.
நாள் ஒன்றுக்கு நூற்றி எண்பது
மாதம் போனால் ஐயாயிரத்து நானூறு
ஆண்டு ஒன்றில் அறுபத்து நாலாயிரம்
கூடவே தொக்கி நிற்குது எண்ணூறு.
பத்து ஆண்டில் ஆறரை லட்சம்
பாவி அதனை வட்டிக்கு விட்டால்
கூட்டு வட்டியில் குறைந்த பட்சம்
ஒன்றரை லட்சம் கிடைத்து இருக்கும்
அருமையான ஒரு குளுகுளு மோட்டார்
வாகனம் ஒன்று வாங்கி இருக்கலாம்
பொறுமை காத்து கேட்டு இருந்தவன்
தாங்க முடியாமல் திருப்பி கேட்டான்
உனக்குப் புகைக்கும் பழக்கம் உள்ளதா
இல்லை என்று மெல்லச் சொன்னாள்
உனது குளுகுளு வாகனம் எங்கே?
கிண்டலைக் கேட்டவள் தலை தொங்கியது.

எழுதியவர் : (11-Jan-13, 1:32 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 92

மேலே