போகி புத்தாடை திருநாள்

தான் கொண்டு வந்த
வண்ண ஆடைகளை
வாரிக்கொண்டு வகைப்படுத்தி
சூடிகொண்டு சுற்றி விளையாடி
மகிழ்ந்த குழந்தைகளை,
நெகிழ்ச்சியுடன் நெருங்கி,
பழமையை புதுமையென
அளித்ததற்காக
மனதோடு மன்னிக்க வேண்டி
புன்னகைத்தாள் ....
பணக்கார வீட்டு
வேலைக்கார அம்மா...!?
போகித்திருநாள் அன்று...

எழுதியவர் : தென்றல் இளவரசி (12-Jan-13, 1:38 pm)
பார்வை : 303

மேலே