பொங்குக மனிதம்
மஞ்சள் கிழங்கெடுத்து மாவில தோரணம் கட்டி
மனையறம் சிறக்கவே மாக் கோலமிட்டு
உதிக்கும் சூரியனை உல்லே வரவழைத்து
மனைவியும் மக்களும் ஒன்றாய் இனய்ந்து
செங்கரும்பு சாறெடுத்து சென்நெல் மணியோடு
புதுப் பானையில் போட்டு இல்ல மெல்லம்
இனிமை பொங்க இதயம் எல்லாம் அன்பு பொங்க
செந்தமிழ் அங்கு தேனாய் ஊற்றெடுக்க
மண்னில் மனிதம் மலர மாந்தர் ஒன்றாய் வாழ
குறைகள் எல்லாம் தீர குன்றா வளங்கள் பெருக
அறியாமை அறவே ஒழிய இல்லாமை இல்லாமல் போக ஜாதிகள் சட்டென ஓடி ஒளிய ஆறும் நதியும்
நீரால் நிரம்ப வயலெலாம் நெல்லாய் விளைய
உழவனின் வியர்வை இனிப்பாய் மாற
காதலும் வீரமும் இமையமாய் ஓங்க
பொங்கலோ பொங்கல் என பொங்குக வையகம்

