இது கனமழைக் காலம்.......

நீரோட்டம் கிழித்துப்போட்ட
சல்லிவேர் மரத்தடி
உருவகப்படுத்திக் கொள்கிறது
சமகாலத்து மனிதர்களை...

வளைவேறித் திரும்பிய
வாகனப் புழுதியின்
தாடியேற்றம் உணராமல்
வெற்றிடம் வெறித்து
தேடிக் கொண்டிருக்கிறது
ஓருயிர்.. அதன்
தொலைந்து போன காதலை..

இடுப்பாசனத் தொங்கலிநூடே
இன்னதென்று தெரியாமல்
வாரியள்ளிய
காகிதங்கள்....... உலோகக்
கொடுக்கல்களின் வரவுகளாய்..
உணவுக் குழல் பயணிக்கும்
ஏதோ ஒரு திடப்பொருள்
உலர்த்தி விட்டிருக்கிறது
நாளைய நம்பிக்கைகளின்
கண்ணீர் வழிதல்
அடையாளங்களை.....

தற்கொலை விதிகள்
சரியெனப்படுத்தி
எல்லாம் துடைத்து
மண்ணில் புதைகிறது
அன்றைய மாலை அடர்மழை......

எழுதியவர் : சரவணா (13-Jan-13, 7:49 am)
பார்வை : 201

மேலே