உழவன் ....

விளையும் நிலமெல்லாம்
விலை நிலமாகி போக ..
விவசாயம் செய்ய வழியில்லை
விவசாயி வாழ வகையில்லை
விளைபவனை மதிப்பீடு செய்யும் கழகங்கள் - அதை வேடிக்கை பார்க்கும் உலகங்கள் ...
ஊரார் பசிதீர்க்க அயராது உழைப்பவனுக்கு
ஆராய்ந்து பதில் சொல்லும் அரசாங்கம் ..
அன்றாட அவன் வாழ
ஆண்டவனும் வதைக்கிறான் !
ஆகாயம் அழுதால் போதும்
அவன் அழ தேவை இல்லை
உழவன் வாழ வழி செய்வோம் - உலகில்
உயிர் வாழ அவன் செய்வான் ..!

எழுதியவர் : சுரேஷ்.G (12-Jan-13, 10:08 pm)
Tanglish : uzhavan
பார்வை : 196

மேலே