மரங்கள்...பல விதம்....ரமேஷ் ஆலம்
புத்தர் காலத்தைய மரம் ஒன்று...
ஆசையைத் துறக்கக்
கற்றுத் தந்தது.
நியூட்டன் காலத்தைய ...
ஆப்பிள் மரமோ...
ஈர்ப்பு விசையை விடுவித்தது.
எங்கள்...
பள்ளிக்கூடத்து மரங்களோ...
நிழல் பரப்பி...குழந்தைகளுக்கு...
வகுப்பெடுத்துக் கொண்டிருந்தது.
என்றாலும்...
நேற்று வயலோரமாய் இருந்த..
வேப்பமரம் ஒன்று...
திடீரெனப் பால் வடியச் செய்து..
காசு சம்பாதித்துக் கொண்டிருக்கிறது...
வெகு தீவிரமாக,
----------------------
-வணக்கம் தோழர்களே..இது தோழர் ரமேஷ் ஆலம் அவர்களுடைய கவிதை. பொருத்தமான படம் கிடைத்தது என்பதால் இங்கு என்பக்கத்தில் அதனை மறுபதிவு செய்தேன். இது குறித்து கருத்தும் பாராட்டும் சொல் விரும்புபவர்கள்.தோழர் ரமேஷ் ஆலம் அவர்களின் பக்கத்தில் குறிப்பிட்ட இந்த படைப்பில் தெரிவித்தால் மகிழ்வேன். அன்புடன் பொள்ளாச்சி அபி --