பட்டணத்துப் போகி!

வீட்டிலிருந்த பழைய குப்பைகள்
அத்தனையும் அள்ளிக்கொண்டு
அதிகாலையிலே போட்டார்
போகி தீபோற்சவத்தில்

இன்னும் வீட்டிலிருந்த
பழைய ஆடைகளையும்
பவ்வியமாக அள்ளிக்கொண்டு
அதிகாலையிலே போட்டார்...
போகி தீபோற்சவத்தில்

இன்னும் வீட்டில் என்ன இருக்கு...?
எல்லா இடமும் தேடினார்.
எதுவும் கிடைக்கவில்லை!
சோர்வாகச் சோபாவில் அமர்ந்து
தொலைக்காட்சியில் நாளை
பொங்கல் நிகழ்ச்சி என்ன ....?

(அவர் வீட்டிலிருந்த
அவனைப் பெற்ற
அந்தப் பழைய கருவறைச் சட்டி
அது எங்கே....? அது எங்கே....?)

ஒ..அதுவா.....?
அதைத்தான்
போன போகிக்கே
போட்டுவிட்டாரே.....

அருகிலிருக்கும்
முதியோர் இல்லைத்தில்.....!

.......................பரிதி.முத்துராசன்
***********************************************************************
(எழுத்து தளத்துக்கும்
எழுத்து தள நண்பர்களுக்கும்
பொங்கல் கவிதைத் திருவிழாவில் பங்குபெறும்
அனைத்துக் கவிப்பெருமக்கட்களுக்கும் என் இனியப் பொங்கல் வாழ்த்துக்கள்!)

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (13-Jan-13, 12:47 pm)
பார்வை : 120

மேலே