விட்டு சென்ற நீ வருவாய் என்று

நீ சென்ற போதெல்லாம்...
உன் பின்னால்....
என் நினைவுகள் மட்டும் அல்ல...
நானும்தான்!

அது தோழமையா? இல்லை
ஆளுமையா? தெரியவில்லை...
சிறு நெருடல்கள் இருந்த போதும்....
அருகருகில்தான் நாம் இருந்தோம்...

தீண்டல்கள் இருந்த போதும்....
நம்மீதான நம்பிக்கையே நமக்குள்
விஞ்சி நின்றது...

இன்று...
உன் பின்னால் நான் இல்லை...
ஆனால்...
நினைவுகள் இன்னும்
உன் பின்னால்தான்....

இப்போது கூட ....
நம்பிக்கையோடுதான் காத்திருக்கிறேன்
"கல்லறையில்"....
விட்டு சென்ற நீ வருவாய் என்று....

எழுதியவர் : சரவணன் (3-Nov-10, 12:58 pm)
சேர்த்தது : வேசரவணன்
பார்வை : 559

மேலே