ஆற்றங்கரையில் அனாதையாக நான்
கையோடு கை சேர்த்து....
வாழ்க்கை கனவை அதில் கோர்த்து...
அன்போடு நாம் ஆடி பாடிய!
ஆற்றங்கரை....
தோளோடு தோள் சேர்த்து....
கண்ணோடு கண் வைத்து...
என் மடி மீது உன் தலை சாய்த்த...
ஆற்றங்கரை தென்னை மரம்....
நம் காதோடு கதை பேசி...
நம் இடை புக முடியாமல்...
நம்மை சுற்றி சென்ற தென்றல்...
இன்றும் கூட என்னோடுதான்
இருக்கிறது.... நீ மட்டும இல்லாமல்...
அந்நிய தேசத்தில் வாழ்க்கைப் ட்டிருக்கும்...
உனக்கெப்படி தெரியும்....
இந்த செய்தி....
கண்ணீருடன் சுற்றி பார்கிறேன்...
"ஆற்றங்கரையில் அனாதையாக நான்"